முதல்வரை சந்தித்த ரவி மோகன் மாமியார் - விஜய் ஆதரவு யாருக்கு?
மனைவியுடன் விவாகரத்து:
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வரும் ஜெயம் ரவி மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனைவியை பிரிந்து விவாகரத்துக்கு கேட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தற்போது வரை விவாகரத்து கிடைக்காமல் போராடி வருகிறார்கள்.

இருவருக்கும் இடையே பிரச்சனைகள் முடிந்த பாடில்லை. சமீபத்தில் கூட பிரஸ்மீட்டில் பேசிய ரவி மோகன் தன்னுடன் கஷ்ட காலத்தில் இருந்து வந்த தன்னுடைய தோழியையே என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் என்னை நிம்மதியாக வாழவே விட மாட்றாங்க என்றெல்லாம் மனைவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
முதல்வருடன் மாமியார்:
இதனால் ஜெயம் ரவியின் பேச்சில் உண்மை இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறியதோடு அவருக்கு ஒட்டுமொத்த எல்லோரும் ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள். இப்படியான சமயத்தில் ரவி மோகனின் மாமியார் சுஜாதா தற்போது முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

விஜய்யின் ஆதரவு யாருக்கு?
திரைப்பட ரீதியாக முதல்வரை சந்தித்திருந்தாலும் ஜெயம் ரவியின் ரசிகர்கள்..... நிச்சயம் எங்கள் அண்ணன் ஜெயம் ரவிக்கு தான் ஆதரவு கொடுப்பார். கொடுக்க வேண்டும்! இந்த மோசமான மனிதர்களிடமிருந்து ரவி மோகன் அண்ணனை காப்பாற்றுங்கள் விஜய் அண்ணா என் முதல்வரிடம் கோரிக்கை வைத்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இது குறித்து விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும்? என்று நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.
.
