கெனிஷா பேர்ல அர்ச்சனை பண்ணுங்க!.. விட்டுட்டுப் போனாலும் ரவி மோகன் காதல் குறையல?..
நடிகர் ரவி மோகன் தொடர்பான பல சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அர்சனையின் போது கெனிஷா பெயரை சொன்னதாக ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மனைவி ஆர்த்தி ரவியை பிரிந்த பின்னர், கெனிஷாவுடன் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தன.இதற்கிடையில், கெனிஷாவும் ரவி மோகனும் பிரிந்துவிட்டதாகவும் ரவி மோகனே புலம்பிய காட்சிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. ஐசரி கணேஷ் மகள் திருமணத்தின் போது தான் முதல்முறையாக கெனிஷாவுடன் ஜோடி போட்டு ரவி மோகன் வந்தார். தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கும் போது கெனிஷாவுடன் தான் ஆஜர் ஆனார்.

ஆனால், சில மாதங்களிலேயே நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. ரவி மோகனை விட்டு கெனிஷா பிரிந்து செல்ல ஆர்த்தி ரவி, குஷ்பு உள்ளிட்டோர் காரணம் என அழுது புலம்பினார். மேலும், “விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்க மாட்டேன். என் வாழ்க்கை சிதைந்ததற்கு மூன்று எழுத்து கொண்ட இட்லி நடிகை தான் காரணம்” என ரவி மோகன் பேசியதும், அது நடிகை குஷ்பு குறித்து மறைமுகமாக சொன்னதாக சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது.
அதன் பின்னர், குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்த்தி ரவி குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “என் குடும்பம்” என பதிவிட்டதும் கவனம் பெற்றது. இதே சமயம், ரவி மோகன் சாமி மாலை அணிந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், சமீபத்தில் கோவில் ஒன்றில் அர்ச்சனை நடைபெறும் போது ரவி மோகன் கெனிஷாவின் பெயரை கூறியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவிக்கு கெனிஷா மேல் என்ன ஒரு பாசம் என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
