Irumudi Kattu Box Office : இருமுடி கட்டு முதல் நாள் வசூல் இவ்ளோவா?
Aug 22, 2026, 09:32 IST
Irumudi Box Office : 'இருமுடி கட்டு' முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. தெலுங்கில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடித்துள்ள புது படம் தான் 'இருமுடி' (தமிழ் வெர்ஷன் டைட்டில் 'இருமுடி கட்டு')
இப்படம் நேற்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பிரபல இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியிருக்கிறார்.
இதில் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், பேபி நக்ஷத்ரா, சாய் குமார், சுவாசிகா, அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.24.20 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.