'Soori 07' படத்தின் ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த ரவிக்குமார்!

 
Soori 07

ஒரு காலத்தில் காமெடியன் ரூட்டில் டிராவல் பண்ணிக் கொண்டிருந்த நடிகர் சூரி, இப்போது ஹீரோ ரூட்டில் பயணித்து வருகிறார். தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு டிக் அடித்து நடித்து வருகிறார்.

இவர் லைன் அப்பில் 'மண்டாடி' மற்றும் 'Soori 07' என இரண்டு படங்கள் இருக்கிறது. இதில் 'மண்டாடி' படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது.

'Soori 07' படத்தை 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் இயக்கப்போகிறார். இதுக்காக சூரி வாங்கப்போகும் சம்பளம் ரூ.25 கோடியாம்.

இதை பிரபல தெலுங்கு புரொடக்ஷன் கம்பெனியான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தான் தயாரிக்கப்போகிறது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி துவங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web