×

என் ஆயுளை கூட தர தயார்... நடிகை சரோஜா தேவியின் கனிவான வீடியோ பதிவு!

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இந்தியாவின் முன்னணி சினிமா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினர். இதையடுத்து திரை பிரபலங்கள் , நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்காக கூட்டு பிரார்த்தனை செய்தனர். அவர் உடல் நலம் குணமடைந்து கொரோனாவை வென்று வீடு திரும்ப வேண்டும் என அனைத்து இசை பிரியரக்ளும் வேண்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகை நடிகை சரோஜா தேவி எஸ்பிபி குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ''பாலுவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு மிகவும் சங்கடப்பட்டேன். அவர் மிகவும் நல்ல மனிதர். நான் அவரை நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போதெல்லாம், நீங்கள் தேன் சாப்பிடுகிறீர்களா ? என்று கேட்பேன் உங்கள் குரல் இன்னும் அவ்வளவு இனிமையாக இருக்கிறதே என்பேன்.

 அதற்கு அவர் நீங்களும் தான் இன்னுமும் அழகா இருக்கீங்க என்பார். அவர் குணமாகி வந்து நீண்ட வருடங்கள் அவரே பாட வேண்டும். என் ஆயுளை கூட அவருக்கே கொடுத்துவிடு என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்'' என்று கனிவாக பேசிய இந்த வீடியோ அனைவரையும் மனம் கரைய செய்துள்ளது.. இதோ அந்த வீடியோ...


 

From around the web

Trending Videos

Tamilnadu News