×

தமிழ் சினிமாவில் நிஜ சகோதர, சகோதரிகள் 

ஆச்சரியம் தரும் உறவுகள்
 
charu kamal chandra

சினிமாவில் அண்ணன் தம்பி, அக்கா, தங்கை நடிகைகளை நிறைய பார்;த்திருப்போம். அவர்கள் படத்திற்கு நடிக்கும்போதே சில காட்சிகளில் நம்மையும் அறியாமல் பாசம் சென்டிமென்ட் தாங்க முடியாமல் கண்ணைக் கசக்குவோம். அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்று வரை சிவாஜிகணேசன், சாவித்ரி நடித்த பாசமலர் தான் பேர் சொல்லும் படம். அதன்பிறகு எத்தனையோ படங்களில் அண்ணன் தங்கை பாசத்தைக் காட்டியிருந்தாலும் அந்த படத்திற்கு ஈடாகாது. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே...விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக விளைந்த கலையன்னமே... என்ற ஒரு பாடலில் எத்தனை கல்நெஞ்சமானாலும் கரைந்து போய்விடும். அதற்கடுத்தது அண்ணன் தங்கை பாசத்தை அதீத சென்டிமென்டாக காட்டுபவர் யாரென்றால் டி.ராஜேந்தர் தான். அவரது படத்தின் பெயரையே தங்கைக்கோர் கீதம் என்று வைத்து படம் முழுவதும் கண்களைக் கசக்கும்படி காட்சியமைத்திருப்பார்.

நிஜத்தில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது. ஆனால், ரசிகர்களுக்கு எப்போதுமே அவர்களது குடும்பத்தைப் பற்றி அறிய வேண்டும் என்று ஆவல் இருக்கும். அந்த வகையில், சில அண்ணன்-தம்பி நடிகர்களையும், சில அக்கா-தங்கை நடிகைகளையும் பற்றிய தகவல்களை உங்களுக்காகத் தொகுத்து அளித்துள்ளோம். இந்த தகவல்களைப் படிக்கும்போதே உங்களுக்கு அட இவங்களா அவங்க என்று ஆச்சரியம் மேலிடும்.

நடிகர்களை எடுத்துக் கொண்டால், நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன், சந்திரஹாசன். கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சந்திரஹாசன் கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தைக் கவனித்து வந்தார். 2017ல் தனது 82வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

நடிகர் முரளியின் தம்பி டேனியல் பாலாஜி. ஆர்யாவின் தம்பி சத்யா, சிம்புவின் தம்பி குறளரசன், ஜீவாவின் தம்பி ஜித்தன் ரமேஷ், அதர்வாவின் சகோதரர் ஆகாஷ், தனுஷின் அண்ணன் செல்வராகவன், பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட்பிரபு, பிரபுவின் அண்ணன் ராம்குமார், சூர்யாவின் தம்பி கார்;த்திக். அர்ஜூன் அண்ணன் கிஷோர், விஷால் கிருஷ்ண ரெட்டியின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா ரெட்டி, ராகவா லாரனஸின் தம்பி எல்வின் லாரன்ஸ், அஜீத்குமாரின் தம்பி அனில்குமார், ஆதியின் தம்பி சத்ய பிரபாஸ், ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, பிரபுதேவாவின் சகோதரர்கள் நாகேந்திரபிரசாத், ராஜூசுந்தரம்.

நடிகர் விஜயின் தம்பி விக்ராந்த். இவர் வேறு யாருமல்ல. நடிகர் விஜயின் சித்தப்பா மகன் தானாம். 

நடிகையரில் 1950களில்  லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் தமிழ்திரையுலகில் புகழ் பெற்ற நாட்டிய  நடிகைகளாக விளங்கினர். ராதிகா நிரோஷா அக்கா தங்கைகள். இருவரும் சேர்ந்து நடித்த படம் கைவீசம்மா கைவீசு. 1989ல் இப்படம் வெளியானது.

ராதா, அம்பிகா அக்கா தங்கைகள் தான். இருவரும் இணைந்து நடித்தப்படங்கள் காதல் பரிசு, இதயக்கோவில். 1977ல் காதல் பரிசு படம் வெளியானது. 1982ல் எங்கேயோ கேட்ட குரல் வெளியானது. 1983ல் வெள்ளை ரோஜா வெளியானது. இதயக்கோவில் படம் 1985ல் வெளியானது. அதேபோல் அக்கா, தங்கைகளான பானுப்பிரியா சாந்திப்பிரியா இருவரும் 1999ல் சிறையில் பூத்த சின்னமலர் படத்தில் நடித்துள்ளனர். 

நக்மா, ஜோதிகா ஆகியோரும் அக்கா, தங்கைகள் தான். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவில்லை. இவர்கள் இருவருக்;குமே பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. ஆனால் நக்மா, ஜோதிகா இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் இல்லை. ஜோதிகாவின் தந்தை சந்தர் சாதனாவின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் தான் நக்மா. இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் தான் ஜோதிகாவும், ரோஷிணியும். சுருதிஹாசன், அக்ஷரஹாசன் இருவரும் சகோதரிகள்தான். அதேபோல் பேபிஷாலினியும், (தற்போது ஷாலினி) பேபிஷாமிலியும் (ஷாமிலி) சகோதரிகள் தான்.

இவர்கள் அனைவரும் நிஜத்தில் அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகளாக இருந்தாலும் அவர்களில் யாராவது ஒருவர் தான் பிரபலமடைந்து இருப்பார்கள். விதிவிலக்காக அம்பிகா, ராதா, ராதிகா, நிரேஷா, நக்மா, ஜோதிகா ஆகியோர் பிரபலமானார்கள். அதேபோல், நடிகர்களில், சூர்யா, கார்த்தி, ராஜூசுந்தரம், பிரபுதேவா ஆகியோர் பிரபலமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News