Categories: Cinema News latest news throwback stories

தூள் படத்தால் ரசிகர்களிடம் உருவான ட்ரெண்ட்… ஆனா, அதுக்கு விக்ரம் பட்ட கஷ்டம் அவருக்கு தான தெரியும்…

தூள் படத்தில் ஒரு காலின் முட்டியில் விக்ரம் ஒரு பேண்ட் போட்டு இருப்பார். இதன் பின்னால் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு இருக்கிறது என இணையத்தில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது.

2003ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தூள். இப்படத்தினை தரணியின் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் விக்ரம், ஜோதிகா, விவேக் போன்ற பலர் நடித்தனர்.வித்யாசாகர் இசையமைத்த இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்து இருந்தார்.

vikram dhool

இந்தப் படத்தின் நாயகனாக முதலில் விஜய்யை அணுகினார் தரணி. படத்தின் கதை விஜயிற்கு பிடித்திருந்தாலும் தற்போது தான் ஒரு ஆக்‌ஷன் படம் செய்துள்ளேன். லவ் சப்ஜெக்ட் தான் செய்யலாம் என்று இருக்கிறேன் எனக் கூறினார். அதனால் கதையில் சில திருத்தங்கள் செய்துவிட்டு விக்ரமை அணுகினார் தரணி. 2001ஆம் ஆண்டு அவர்களது கூட்டணியான தில்லின் வெற்றிக்குப் பிறகு, தரணி மற்றும் விக்ரம் பிப்ரவரி 2002ல் தூள் படத்தில் இணைந்தனர். முதன்முறையாக விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஜோதிகாவிற்கு கிடைத்தது.

கிராமத்தில் இருக்கும் தொழிற்சாலையால் ஊருக்குள் ஏற்படும் பிரச்னையை அந்த தொகுதி அமைச்சரிடம் சொல்ல ஜோதிகா, பரவை முனியம்மாவை கூட்டிக் கொண்டு விக்ரம் சென்னைக்கு செல்கிறார். முதல் சில காட்சிகளில் நடக்கும் சண்டையில் அவரின் காலில் அடிப்பட்டு விடும். அதற்கு கட்டு போடுவதற்கு பதில் காலில் ஒரு பேண்டை சுற்றி இருப்பார்.

vikram

இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறதாம். படத்தின் துவக்கத்திலேயே விக்ரமிற்கு ஏற்பட்ட நிஜ விபத்தில் இவருக்கு இந்த அடிப்பட்டு இருக்கிறது. கிராமத்து இளைஞருக்கு பேண்ட் போட்டால் நன்றாக இருக்காது என நினைத்தாராம் தரணி. ஆனால் இந்த கட்டை தெரியாமல் பார்த்துக்கொள்ள தான் படத்தின் முதலில் அப்படி ஒரு சண்டை காட்சியை வைத்து விக்ரம் காலில் பேன்ட் போட்டு சமாளித்து இருக்கிறார். ஆனால் இது பின்னால் ரசிகர்களிடம் பெரிய ட்ரெண்ட்டாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily