உண்மையான பேன் இந்தியா ஸ்டாருனா இவர்தான்.. யாராலும் செய்ய முடிஞ்சுதா?
சில படங்களை பார்க்கும் பொழுது அந்த படத்தில் உள்ள ஏதாவது ஒரு கதாபாத்திரம் நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போய் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இந்த கேரக்டர் மாதிரி நமக்கும் நம் வாழ்க்கையில் ஒருத்தர் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என யோசிக்க வைக்கும். அப்படி ஒரு கேரக்டர் தான் லக்கி பாஸ்கர் படத்தில் அமைந்த ஆண்டனி கதாபாத்திரம்.
அந்த கதாபாத்திரத்தில் நடித்த ராம்கி படம் முழுக்க ஒரு நம்பக த்தன்மையை ஏற்படுத்தி இருப்பாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை படத்தை பார்க்கும் பொழுது இவர் ஏமாற்றப் போகிறாரா, பணத்தை சுருட்டி கொண்டு ஓடப் போகிறாரா, துல்கர் சல்மானுக்கு எதிராக எதுவும் செய்யப் போகிறாரா என்ற ஒரு அச்சத்தையே நம்மில் வரவழைத்து இருக்கும்.
ஆனால் சாதாரண பாஸ்கராக இருந்த துல்கர் சல்மானை லக்கி பாஸ்கர் ஆக மாற்றியதற்கு இந்த ராம்கியின் ஆண்டனி கதாபாத்திரம் தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கும். யாரும் எடுக்காத ஒரு கதைக்களம். ஆனால் நம்மில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சம்பவம் தான் இந்த லக்கி பாஸ்கர் திரைப்படம். யாருமே ஏமாறாமல் வாழ்க்கையை கடந்து போயிருக்க மாட்டோம்.
ஏதாவது ஒரு வகையில் ஒரு ஏமாற்றத்தை சந்தித்திருப்போம். அப்படி ஒரு கதையை அடிப்படையாக வைத்து தான் இந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் அமைந்தது. தீபாவளி ரிலீஸ் ஆக வெளியான மூன்று படங்களில் அமரன் திரைப்படம் கமர்சியல் ஹிட் என்றால் லக்கி பாஸ்கர் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் அனைத்து ரசிகர்களும் ரசித்த திரைப்படமாக மாறியது.
ரஜினி முதல் விஜய் ,அஜித் அதே மாதிரி மற்ற மொழி சினிமாக்களிலும் சூப்பர் ஸ்டார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே ஒரு பேன் இந்தியா ஸ்டார் என்றால் அது துல்கர் சல்மான் தான். அவரால் மட்டுமே தான் தமிழில் ஒரு ஹிட் கொடுக்க முடிந்தது. சாதாரண ஹிட் இல்லை.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் ஒரு பெரிய ஹிட் கொடுத்தார்.
‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதை போல தெலுங்கு, கனடாவிலும் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார். இப்படி எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து உண்மையான ஒரு பேன் இந்தியா ஸ்டார் இவர்தான் என நிரூபித்திருக்கிறார் துல்கர் சல்மான்.