×

மீண்டும் வெளிவரும் 1971ஆம் ஆண்டு துக்ளக் : பஞ்சாயத்து முடிவுக்கு வருமா?

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி விட்டதாக திக, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் தான் பேசியதற்கு ஆதாரமாக சில பத்திரிகைகளின் ஜெராக்ஸ் காப்பியை காண்பித்தார். ஆனால் துக்ளக் இதழில் வந்த ஆதாரத்தை தான் ரஜினிகாந்த் காண்பிக்க வேண்டும் என்று அதற்கும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்

இந்த நிலையில் 1971ஆம் ஆண்டு துக்ளக்கில் அப்படி என்னதான் வந்தது என்பதே பலரது கேள்வியாக உள்ளது. இந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பல துக்ளக் வாசகர்கள் திகவின் 1971 சேலம் ஹிந்து கடவுள் அவமதிப்பு ஊர்வலம் பற்றி வந்த துக்ளக் இதழை மறுபடி வெளியிடும்படி கேட்டிருக்கிறார்கள். அந்த முழு இதழும் அவசியமில்லை. அதில் வந்த சேலம் பற்றிய விவரங்களை மட்டும் வருகிற இதழில் கொடுக்க நினைக்கிறோம். என்று கூறியுள்ளார். எனவே பெரியார் பிரச்சனைக்கு வரும் துக்ளக் இதழ் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web

Trending Videos

Tamilnadu News