நான் இறந்தால்!.. பாரதிராஜாவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்!..
பாரதிராஜாவின் உடலுக்கு பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு மரியாதையுடன் அவரின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
பாரதிராஜாவை பிறவிக் கலைஞனை என்று சொல்லலாம். ஏனெனில், அவரின் எண்ணம், செயல், சிந்தனை, ஆசை, விருப்பம், கனவு, லட்சியம், குறிக்கோள், வாழ்க்கை என எல்லாமே சினிமாவாகவே வைத்திருந்தது. அவர் சினிமாவையே வாசித்தார், சினிமாவையே சுவாசித்தார், சினிமாவாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் அவருக்கு பின் இயக்குனர் தலைமுறைக்கு அவர் ஆசனாகவும், குருவாகவும் இருக்கிறார்..
தமிழ் சினிமாவை புரட்டுப்பட்ட பாரதிராஜா நேற்று அதிகாலை 2 மணி அளவில் சென்னையிலுள்ள தனது வீட்டிலேயே மரணமடைந்தார். தற்போது அவரது உடல் தேனி மாவட்டம் வத்தலகுண்டு காட்ரோடு அருகேயுள்ள உள்ள அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
மகனின் மறைவுக்கு பின் மனதளவில் உடைந்துபோன பாரதிராஜா சென்னை நீலங்கரையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். சில நாட்கள் மலேசியாவில் உள்ள தனது மகள் ஜனனி வீட்டிலும் இருந்தார். அப்போது ‘நான் இறந்து போனால் எனது உடலை நமது பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய வேண்டும்’ என அவர் தனது மகள் ஜனனிடம் சொல்லியிருக்கிறார்..
அதனால்தான், பாரதிராஜாவின் உடலை சென்னையிலேயே தகனம் செய்யலாம் என திரையிலகில் பலரும் சொல்லியும் அதை நிராகரித்துவிட்டு தனது தந்தையின் உடலை தேனியில் உள்ள பண்ணை விட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார் பாரதிராஜாவின் மகள் ஜனனி. அங்கு மதுரை, தேனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு மரியாதையுடன் அவரின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
