Jananayagan: ஜனநாயகனுக்கு வந்த அழுத்தம்!. ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டதன் பின்னணி!..
ஹெச்.வினோத் இயக்கி, விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸாகவிருக்கிறது. தெலுங்கில் பாலய்யா நடித்து வெளியாகி ஹிட்டான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக ஜனநாயகன் உருவாகியிருக்கிறது.
பகவந்த் கேசரியில் ஸ்ரீலீலா நடித்த வேடத்தில் தமிழில் மமிதா பைஜுவும், காஜல் அகர்வால் நடித்த வேடத்தில் பூஜா ஹெக்டேவும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக பாலிவுட் நடிகர் பாபிதியோல் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். பக்கா கமர்ஷியல், மாஸ், ஆக்சன் படமாக ஜனநாயகன் உருவாகியிருக்கிறது.
விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் அரசியல் தொடர்பாக சில காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார்களாம். அதேநேரம், இந்த படம் பெரிய அளவில் அரசியல் பேசாது என்கிறார்கள். ரிலீஸுக்கு முன்பே இப்படம் 300 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. விஜயின் கடைசிப்படம் என்பதால் இப்படம் பல நூறு கோடி வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.

படத்தின் ரிலீஸ் 2026 ஜனவரி என்பதால் டிசம்பர் மாதத்தில் இப்படத்தின் புரமோஷன் வேலைகளை துவங்க திட்டமிட்டிருந்தனர். ஃபர்ஸ்ட் சிங்கிளையே அப்போதுதான் வெளியிட திட்டமிட்டனர். ஆனால், படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் நிறுவனம் புரமோஷன் வேலைகளை நவம்பர் மாதமே துவங்குங்கள் என தயாரிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது. அதனால்தான், சமீபத்தில் தளபதி கச்சேரியை ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக சமீபத்தில் வெளியிட்டார்களாம். புரமோஷனை துவங்கிவிட்டதால் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.
