Thalaivar173: ரஜினி - சுந்தர்.சி படத்தை முன்பே வெளியிட்டது ஏன்?!... இதுதான் காரணமா?!...
திரையுலகில் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருப்பது ரஜினி கமல் மட்டுமே. வளரும் காலங்களில் இருவரும் ஒன்றாக தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் தனித்தனியாக நடிக்க முடிவு செய்தார்கள். அதன்பின் கடந்த 40 வருடங்களுக்கு மேல் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவே இல்லை. ஆனால் தற்போது அது கூடி வந்திருக்கிறது.
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அவரின் 173-வது திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று மாலை வெளியானது.
கடந்த பல வருடங்களாகவே ரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து சலித்துப் போய்விட்டதால் ஒரு குடும்ப காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ரஜினிக்கு வந்ததே இதற்கு காரணம் என்கிறார்கள்.
அதோடு தக் லைப் படத்தை தயாரித்து வகையில் கமலுக்கு 180 கோடி வரை நஷ்டம் என்பதால் அவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரஜினி இரண்டு படங்கள் நடித்துக் கொடுக்க முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே சுந்தர்.சி படம் மட்டுமில்லாமல் அடுத்து கமலுடன் ரஜினி இணைந்து நடிக்கும் படத்தையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. ஆனால் அந்த படத்தை இயக்குவது யார் என்பது இதுவரை உறுதியாக சொல்லப்படவில்லை. நெல்சனின் பெயர் அதிகமாக அடிபடுகிறது.

அருணாச்சலம் படத்திற்கு பின் சுந்தர்.சி-யும் ரஜினியும் இணையவில்லை. எனவே இது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஒரு இந்த படம் பற்றிய அறிவிப்பு கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் நேற்று மாலை திடீரென அறிவித்து விட்டார்கள்.
இதற்கு பின்னணியில் சில காரணங்கள் சொல்லப்படுகிறது. கமல் தனது பிறந்தநாளில் தான் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு மட்டுமே வெளியாகவேண்டும் என விரும்புவார். ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பு - அறிவு இயக்கத்தில் அவர் நடிக்கப் போகும் படத்தின் அறிவிப்பு அன்று ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியாகவுள்ளது. எனவேதான் நேற்று ரஜினி - சுந்தர்.சி படத்தை அவர் அறிவித்து விட்டார் என்கிறார்கள் சிலர்.

சிலரோ ரஜினி - சுந்தர்.சி இணையும் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் வெளியிடப் போகிறது. ஒரு மாதமாக வெளியே வராமல் இருந்த தவெக லைவர் விஜய் நேற்று அவரின் கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக பேசியிருந்தார். எனவே இந்த விவகாரம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரெட் ஜெயின்ட் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே ரஜினி - சுந்தர்சி பட அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் சிலர் பேசுகிறார்கள்.
அதாவது இந்த அறிவிப்பு வெளியானால் எல்லோரும் இதைப் பற்றிய பேசுவார்கள். பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியது கவனிக்கப்படாமல் போய்விடும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம் எனவும் சிலர் பேசுகிறார்கள். இதில் உண்மை என்ன என்பது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வெளிச்சம்!..
