Thalaivar173:ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக இதுதான் காரணமா?!.. பரபர அப்டேட்!..
ரஜினியின் 173-வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. சுந்தர்.சியின் இந்த அறிவிப்பு சினிமா உலகில் மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே ரத்தம் தெறிக்கும் ஆக்சன் கதைகளில் நடித்து வந்த ரஜினி, சுந்தர்.சி இயக்கத்தில் நடித்தால் ஒரு குடும்ப காமெடி படமாக அது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்திருக்கிறார்.
ரஜினியை வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. அதேபோல் கமலை வைத்து அன்பே சிவம் படத்தையும் இயக்கினார். தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ரஜினி படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
ஆனால், திடீரென சில காரணங்களால் இந்த படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்திருக்கிறார். அதற்கு என்ன காரணம் என அவர் எதுவும் சொல்லவில்லை. சுந்தர்.சிக்கு கதை சொல்லத் தெரியாது. ஒரு ஒன்லைன் மட்டுமே ஹீரோவிடம் சொல்லுவார். ஆனால் வெற்றி பெறும்படியான ஒரு படத்தை எடுத்துக் கொடுத்து விடுவார். ஆனால் முழுக்கதையாக கேட்டால் அவருக்கு சொல்ல வராது.

இது அவரின் இயக்கத்தில் நடித்த பல நடிகர்களுக்கும் தெரியும்.ஆனால் இது கமலின் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம். அப்படி இருக்கும் போது ‘முழு கதையை கொடுங்கள்’ என ரஜினியோ அல்லது கமலோ சுந்தர்.சி-யிடம் கேட்டிருக்கலாம். அது முடியாது என்பதால் நாம் இந்த படத்தில் இருந்து விலகிவிடலாம் என சுந்தர்.சி முடிவெடுத்திருக்கலாம் என்கிறார்கள்..
‘சுந்தர்.சி எப்படி வேலை செய்வார் என்பது ரஜினி, கமல் இருவருக்குமே தெரிந்திருக்கும். எனவே இது முன்பே தெரியவில்லையா?’ என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதில் ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது. அன்பே சிவம் படத்தின் கதையை எழுதியது சுந்தர்.சி இல்லை. அந்த படத்தின் கதையை எழுதியது கமல். அதேபோல் அருணாச்சலம் படத்தின் கதையும் சுந்தர்.சி-யோடது இல்லை. அது ஒரு ஆங்கில நாவல். அந்த நாவலை அடிப்படையாக வைத்து அதே தலைப்பில் ஒரு ஆங்கில படமும் வெளிவந்தது.
அதைத்தான் தமிழில் அருணாச்சலம் என எடுத்தார்கள். அதாவது ரஜினி, கமல் ஆகிய இரண்டு பேரையும் வைத்து சுந்தர்.சி இயக்கிய படங்களில் அவர் இயக்குனர் மட்டுமே. கதாசிரியர் இல்லை. தற்போது ரஜினிக்கான முழுக் கதையையும் சுந்தர்.சி முன்பே சொல்ல வேண்டும் என்பதில்தான் சிக்கல் தொடங்கியிருக்கலாம் என்கிறார்கள். எப்படி இருந்தாலும் தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதற்கான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
