2000ம் ஆண்டின் போது நடிகர் விஜய் பல தோல்விப் படங்களை கொடுத்து ஒரு வெற்றிக்காக காத்திருந்தார். அவருக்கு வாழ்வா சாவா நேரம். அப்போது வாலி எனும் ஹிட் படத்தை கொடுத்திருந்த எஸ்.ஜே. சூர்யா விஜயை சந்தித்த கூறிய கதைதான் குஷி.
இந்த படத்தில் கதை என எதுவும் இருக்காது. ஒரு இளம்பெண் மற்றும் வாலிபர் இருவருக்கும் இடையேனான ஈகோவை வைத்து மட்டுமே காட்சிகளை நகர்த்தியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. அதோடு, படத்தின் கதை இதுதான் என படம் துவங்கும் போதே கூறி அப்படத்தை வெற்றி பெற வைத்தார். இப்படத்தில் விஜய் – ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். இப்படம் 2001ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தை பார்த்த இயக்குனர் விக்ரமன் ‘எப்படி விஜய், குஷி படத்தை செலக்ட் பண்ணீங்க.. அதுல கதைன்னு என்ன இருக்கு?’ என விஜயிடம் ஆச்சர்யமாக கேட்க ‘கரெக்ட்தான் சார். ஆனா எஸ்.ஜே.சூர்யா கதை சொல்லி நீங்க கேக்கணும் சார்… அதுல கிங் அவரு..அவர் கதை சொன்ன விதத்துல மெஸ்மரைஸ் ஆயிட்டேன் சார்’ என விஜய் அவரிடம் கூறினாராம்.
மேலும், ‘என்னுடைய சினிமா வாழ்க்கையில் முக்கியமான நேரத்தில் வெளிவந்த முக்கியமான படம் குஷி. வாழ்வா சாவா சூழ்நிலை. அந்த நேரத்துல குஷி படம் மூலம் என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே.சூர்யா’என நெகிழ்ந்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பல வருடங்களுக்கு பின் இதே எஸ்.ஜே சூர்யா மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.
இது போன்ற சூழ்நிலையில்தான் அஜித்திற்கும் வாலி எனும் ஹிட் படத்தை கொடுத்து மார்க்கெட்டை தூக்கிவிட்டவர் எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…