1. Home
  2. Latest News

எஸ்.ஏ.சியை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் இருக்க காரணம் இதுதானாம்!.. அதுவும் சரிதான்...

vijay sac
எஸ்.ஏ.சியை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் இருக்க காரணம்

விஜய் எஸ்.ஏ.சி

சினிமாவிலும் சரி.. அரசியல் நடவடிக்கைகளிலும் சரி. விஜயை படிப்படியாக வளர்த்தவர் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்தான். நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் விஜயை அறிமுகம் செய்து வைத்தார். அதுகூட ‘நான் சினிமாவில்தான் நடிப்பேன்’ என விஜய் அடம் பிடித்ததால்தான். விஜயை வைத்து யாரும் படமெடுக்க முன் வராததால் சொந்த காசில் அவரை ஹீரோவாக போட்டு தொடர்ந்து படங்களை இயக்கினார் எஸ்.ஏ.சி.

அதேபோல், சினிமாவில் விஜய் வளர்ந்த போது அவருக்கு பக்கபலமாக எஸ்.ஏ.சி, இருந்தார். கதைகளை கேட்டு விஜய் நடிக்கும் படத்தை முடிவு செய்வது, அவரின் சம்பளம் பேசுவது என எல்லாவற்றையும் அவர்தான் பார்த்துக்கொண்டார். அதுமட்டுமல்ல. விஜய் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அவற்றை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி விஜயின் அரசியல் ஆசைக்கு அடித்தளம் இட்டவர் எஸ்.ஏ.சி.தான். விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி அவர்களை அரசியல்படுத்தினார். ஆனால், சில காரணங்களால் விஜய்க்கும், அவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விஜய் தனியாக செயல்பட துவங்கினார்.

sac

விஜய் தனியாகவும் எஸ்.ஏ.சி மற்றும் அவரின் மனைவி ஷோபா தனியாகவும் தனித்தனி வீடுகளில் வசிக்க துவங்கினர். விஜய் எஸ்.ஏ.சியை சந்திப்பதையும் அவருடன் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார். எஸ்.ஏ.சி மகன் விஜயை சந்திக்க ஆசைப்பட்டு சில முறை முயற்சி செய்தபோதும் விஜய் அவரை சந்திப்பதையே தவிர்த்த சம்பவமெல்லாம் நடந்தது. ஆனாலும் ஊடகங்களில் விஜயின் நடவடிக்கை பற்றி எஸ்.ஏ.சி. ஒருமுறை கூட பேசவில்லை. ‘விஜய் என்னை அவ்வப்போது நேரில் வந்து பார்த்தால் போதும்’ என ஃபீலிங்கோடு பேசினார்.

திடீரென விஜயின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் எஸ்.ஏ.சி. உடனே ‘விஜய் அரசியலுக்கு வந்து விட்டார்’ என பரபரப்பாக செய்திகள் வெளியாக விஜய் உடனே அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதோடு ‘விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் எஸ்.ஏ.சியுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்று அறிக்கையே விட்டார். அதன்பின் எஸ்.ஏ.சி அமைதியாகிவிட்டார்.

sac anand

ஆனால் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி அரசியலுக்கு வந்தார் விஜய். இதில் ஆச்சரியம் என்னவெனில் அப்பாவையே தன்னுடன் வைத்துக் கொள்ளாத விஜய் புதுச்சேரியில் இருந்து வந்த புஸி ஆனந்தை கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்தார். இதைத் தொடர்ந்து ஊடகங்களில் பேசிய எஸ்.ஏ.சி ஒரு whatsapp குழு இருக்கிறது, கட்சி அலுவலகத்தில் புஸி ஆனந்த் களைப்பாக படுத்திருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து அதை அந்த whatsapp குரூப்பில் பதிவிடுவார்கள். அதை பார்க்கும் விஜய் ‘கட்சிக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறாரே’ என ஃபீல் பண்ணி அவருக்கு முக்கிய பதவியை கொடுத்தார். புஸி ஆனந்த் இருக்கும் வரை கட்சி விளங்காது’ என்றெல்லாம் எஸ்.ஏ.சி பேட்டி கொடுத்தார்.

தற்போது விஜய் அரசியல் கட்சியை துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதோடு கரூர் சம்பவம் விஜயின் அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாகவே அமைந்துவிட்டது. ‘விஜய் இப்போதாவது அப்பாவை தன்னுடன் வைத்துக்கொண்டால் அது அவர் அரசியலுக்கு நல்லது. ஏனெனில் அவர் விஜய்க்கு தகுந்த ஆலோசனைகளை சொல்வார்’ என பலரும் பேசுகிறார்கள்.

vijay

விஜய் அதை செய்வாரா என்பது தெரியவில்லை. அதேநேரம் விஜய் ஏன் தனது அப்பாவை தன்னுடன் வைத்துக் கொள்ளவில்லை என்கிற தகவல் வெளியே கசிந்திருக்கிறது. எஸ்.ஏ.சி மிகவும் கண்டிப்பானவர். பொசுக்கென அவருக்கு கோபம் வந்துவிடும். எதிரே யார் இருந்தாலும் மனசில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் அடிக்கடி அப்படி கோபமாக நடந்திருக்கிறார்.

இது விஜயிடம் சொல்லப்படவே அவரை ஒதுக்கி வைத்து விட்டார் என்கிறார்கள். தனது அப்பாவை உள்ளே கொண்டு வந்தால் கட்சி நிர்வாகிகளிடம் கண்டிப்பாக எஸ்.ஏ.சி கோபம் காட்டுவார். அவர் பேசும் ஸ்டைல் அவர்களுக்கு பிடிக்காது. கட்சியில் சலசலப்பும், குழப்பம் ஏற்படும் என விஜய் நினைக்கிறாராம். அதனால்தான் இப்போது வரை அவர் தனது அப்பாவை சேர்த்துக் கொள்ளவில்லை என்கிறார்கள்’ விபரம் அறிந்தவர்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.