Categories: Cinema News latest news

சூப்பர் ஸ்டார் ரஜினி – இயக்குனர் சிவா சந்திப்பு: ஒருவேளை இருக்குமோ?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பூ நடிப்பில் கடந்த தீபாவளிக்கு தியேட்டரில் வெளியான படம் ‘அண்ணாத்த’. சந்திரமுகி, தர்பார் படங்களைத் தொடர்ந்து இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா.

இப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், குடும்பங்கள் கொண்டாடும் விதமாக செண்டிமெண்ட் கதையில் அமைந்திருந்தது. படம் வெளியாகி ஒரு ஆன நிலையில் தற்போது திடீரெனெ இயக்குனர் சிவா வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

திடீரென இருவரும் சந்தித்துள்ளதால் இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் உள்ளதாக .கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த சந்திப்பின்போது ரஜினி இயக்குனர் சிவாவுக்கு அண்ணாத்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தங்க செயின் பரிசளித்ததாக கூறப்படுகிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்