விஜய் ஆண்டனி செருப்பு போடாமல் இருப்பதற்கு காரணம்! - சோகப் பின்னணி!...
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால் கோலிவுட்டில் ஒரு முக்கிய நடிகராக மாறினார். இவரின் திரைப்படங்கள் தமிழில் உருவானாலும் அதை தெலுங்கு டப் செய்யப்பட்டு நல்ல வசூலையும் பெற்று வருகிறது. ஒரு பக்கம் கடந்த பல மாதங்களாகவே விஜய் ஆண்டனி திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு வரும்போது செருப்பு அணியாமல் வெறும் காலில்தான் வருகிறார்..
விஜய் ஆண்டனி நடிப்பில் அப்பா குட்டி என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா ‘அவர் ஏன் செருப்பு போடுவதில்லை என்று யாருக்கும் இதுவரைக்கும் காரணத்தை சொல்லவில்லை. மீராகிட்ட 100 சிறப்பு இருக்கும்.. அவ காலேஜ் போவதற்காக வாங்கி வைத்திருந்தோம்.. அதெல்லாம் அப்படியே இருக்கு.. அதை பார்த்துட்டு அன்னைக்கு முடிவு பண்ணினார்.. இனி நான் செருப்பு போடாமதான் வாழ்க்கை முழுசா இருப்பேன்னு.. அதேநேரம் இசை நிகழ்ச்சி நடத்தும்போது மட்டும் வேற வழியில்லாமல் செருப்பு போடுவார்’ என பாத்திமா மேடையில் கூற கீழே அமைந்துள்ள விஜய் ஆண்டனியும் கண்கலங்கினார்.
விஜய் ஆண்டனியின் மகள் மீரா 2023ம் வருடம் மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
