Categories: Cinema News latest news throwback stories

லிவிங்ஸ்டன் ஹீரோ ஆனதுக்கு பின்னடி இப்படி ஒரு கதையா?…

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக வாழ்க்கையை துவங்கி பின் நடிகராக மாறியவர் லிவிங்ஸ்டன். பாக்கியராஜ் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஓரிரு காட்சியிலும் வந்து செல்வார். நடிகர் விஜயகாந்த் இவரை அரவணைத்தார். தான் ஹீரோவாக் நடித்த ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தில் வில்லனாக இவரை நடிக்க வைத்தார்.

இந்நிலையில், தான் ஹீரோவாக நடித்த காரணத்தை லிவிங்ஸ்டன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நான் ஹீரோ ஆனதே வைராக்கியத்தில்தான். ஒருமுறை நான், விஜயகாந்த் இன்னும் 3 பேர் ரயிலில் பயணம் செய்தோம். அப்போது ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற என் ஆசையை அவர்களிடம் கூறினேன். நான் அப்படி சொன்னதும் அந்த 3 பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனக்கு அவமானமாக போனது. நான் கூனி குறுகுவதை பார்த்த விஜயகாந்தின் கண் சிவந்துவிட்டது. அவங்களை பார்வையாலேயே முறைத்து அவர்களை கண்டித்தார்.

அந்த நிமிஷம் எனக்குள் ஒரு வைராக்கியம் பிறந்தது. இவங்க முன்னாடி ஒரு படத்திலயாவது ஹீரோவாக நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அது நடந்தது என லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.

சுந்தர புருஷன், சொல்லமாலே ஆகிய 2 படங்களில் லிவிங்ஸ்டன் ஹீரோவாக நடித்தார். 2 படமுமே செம ஹிட். அதோடு, பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக இவர் நடித்துள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா