விடாமுயற்சி தோல்வி.. நஷ்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்.. தனுஷை வைத்து சரி கட்ட முடிவு

by Rohini |   ( Updated:2025-02-16 01:30:31  )
vidamuyarchi
X

விடாமுயற்சி வீண் முயற்சி: அஜித் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்த திரைப்படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். அர்ஜூன், ஆரவ் என முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை ஹாலிவுட் கோணத்தில் பார்த்திருந்தால் படத்தை ரசிகர்கள் ரசித்திருப்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் படத்தின் ஹீரோ அடித்தால் 100 பேர் சாக வேண்டும் என்ற கோணத்திலேயே படத்தை பார்த்து ஏமாந்து போனார்கள்.

கண்டெண்ட் ஓரியண்டட்: படத்தை பார்த்த இன்னும் சிலர் ஓடிடியில் இந்த மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் பார்த்திருந்தால் ஒருவேளை விடாமுயற்சி படத்தின் அருமை தெரியும் என்றெல்லாம் கூறினார்கள். எப்படியோ எப்போதும் போல உள்ள அஜித் படம் மாதிரி இந்தப் படம் வசூலிலும் மண்ணை கவ்வியது. விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவியது.

அந்தணன் பேட்டி: இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை வாங்கிய தியேட்டர் உரிமையாளர்கள் படத்தின் தோல்வியால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் மீண்டும் பணத்தை திருப்பி கேட்கும் நிலையில் இருக்கிறார்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறினார். இந்தப் படத்தின் தமிழ் நாட்டு தியேட்டரிக்கல் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வாங்கியது. அதனால் அந்த நிறுவனத்திடம் போட்ட பணத்தை திரும்ப கேட்டு வருகின்றார்களாம்.

தனுஷ்தான் காப்பாத்தணும். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் தியேட்டரிக்கல் உரிமையை வாங்கியிருக்கிறது. அதனால் அந்தப் படம் ரிலீஸானதும் அதன் ரிசல்ட்டை வைத்து சரி செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்களாம். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்றும் சொல்லப்படுகிறது.


டிரெய்லரில் மிரட்டிய தனுஷ்: தனுஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முற்றிலும் இளைஞர்களை வைத்துஎடுக்கப்பட்ட படம் என்பதால் இளைஞர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story