Categories: Cinema News latest news

இவங்களுக்கு வேற வேலையே இல்ல.. உதயநிதியின் தொடர் சம்பவம்.! டிவிட்டரில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்….

தமிழ் சினிமாவில் சினிமா செய்தி நிறுவனங்களைத் தாண்டி அப்டேட் தரும் ஒரே நிறுவனம் என்றால் அது உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான். தமிழ் சினிமாவின் விநியோகிஸ்த உரிமையை குத்தகைக்கு எடுத்தார் போல் அவருடைய நிறுவனம் தான் அடுத்தடுத்து பெரிய படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்து வருகிறது.

கணக்கு வழக்குகள் நேர்மையாகவும் வெளிப்படை தன்மையுடனும் இருப்பதனால், அதிக தியேட்டர்கள் அவருக்கு ஆதரவு தருவதனாலும், அவரை தேடி பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் சென்று தங்களது படங்களை வெளியிட்டு தருமாறு கோரி வருகின்றனர். சிறிய படங்களும் ரெட் ஜெயண்ட் மூவிஸால் ரிலீஸ் செய்து தரப்படுகிறது.

இதையும் படியுங்களேன்  – யுவன் பிறந்த கதை தெரியுமா.?! அழகாய் விவரிக்கும் இளையராஜா.. வைரலாய் பரவும் அந்த வீடியோ…

 

அப்படி அவர்கள் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிடுகையில், அப்பட பெயரை முழுதாக அறிவிக்க மாட்டார்கள். பட அறிவிப்பு வெளியாகும் என்று மட்டுமே ஒரு அறிவிப்பை வெளியிடுவார்கள். அதற்கு கீழே ட்விட்டரில் ரசிகர்கள் இது எங்கள் படத்திற்கான அப்டேட் எங்கள் ஆஸ்தான நடிகருக்கான அப்டேட் என கமெண்ட் செய்து வருவார்கள்.

இதையும் படியுங்களேன்  –  இந்த பொண்ணு மேல கைவைக்க முடியும் அந்தாளு வைக்கிறாரு… கவிஞரை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி.!

அப்படித்தான் தற்போதும் ஒரு அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில் நாளை காலை 11 மணிக்கு ஓர் வியக்கத்தக்க அறிவிப்பு வெளியாக உள்ளது என்பதை அறிவித்துள்ளது. அந்த  டிவிட்டர் கீழே வழக்கம் போல விட்டரில் ரசிகர்கள் இது விஜய் திரைப்படத்திற்கான அப்டேட், அஜித் திரைப்படத்திற்கான அப்டேட், விடுதலை, இந்தியன் 2 என அவர்கள் இஷ்டம் போல தங்களது கமெண்ட்களை பறக்க விட்டு வருகின்றனர். என்ன அறிவிப்பு என்பது நாளை காலை 11 மணிக்கு தான் தெளிவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan