பொண்டாட்டிகிட்ட சண்ட போட்டா உங்க வீடியோதான் காட்டுவேன்! VJSக்கு ஷாக் கொடுத்த ரெடின்கிங்ஸ்லி
நேற்று மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக விஜய்சேதுபதி, நெல்சன், ரெடின் கிங்ஸ்லி என பலரும் கலந்துக் கொண்டனர். கவின், ஆண்ட்ரியா லீடு ரோலில் நடிக்கும் திரைப்படம் தான் மாஸ்க். கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அந்தப் படம் தயாராகியிருக்கிறது.
இதில் ஆண்ட்ரியா முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இதற்கு முன் கவின் நடிப்பில் பிளடி பெக்கர் மற்று கிஸ் போன்ற படங்கள் வெளியானாலும் அந்தப் படம் கவினுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. அதனால் இந்தப் படமாவது அவருக்கு ஒரு கம்பேக் கொடுக்குமா என அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
கவினுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் திரையுலகை சார்ந்த பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அதில் குறிப்பாக விஜய் சேதுபதி அந்த மேடையையே கலகலப்பாக்கினார். அவரை தொடர்ந்து பேசிய ரெடின் கிங்ஸ்லியும் ஜாலியாக பேசி அனைவரையும் கலகலப்பாக்கினார். விஜய்சேதுபதியை சேது அண்ணா என்று கூறிய போது உடனே ‘ நான் அண்ணனா?’ என உட்கார்ந்த படியே விஜய்சேதுபதி கேட்டார்.
உடனே சேது மாமா என்று ரெடின் அழைத்தார். மேலும் சமீபத்தில் நீயா நானா கோபியுடன் விஜய்சேதுபதி பேசும் போது ‘பொண்டாட்டியுடன் சண்டை போட்டா உடனே கால்ல விழுந்துவிட வேண்டும்’ என விஜய்சேதுபதி பேசியிருப்பார்.

அந்த வீடியோவைத்தான் ரெடின் கிங்ஸ்லி தன் மனைவியுடன் சண்டை போடும் போதெல்லாம் காட்டி காட்டி கன்வின்ஸ் செய்வாராம். இதை அந்த மேடையில் பேசி இருந்த அத்தனை கணவன்மார்களையும் கலகலப்பாக்கினார் ரெடின்.
