×

ரீல் ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த ஹீரோயின் வாய்ப்பு.... டிக்டாக் மூலம் அடித்த ஜாக்பாட்!

உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தமிழில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இருவர், எந்திரன், ஜீன்ஸ் , ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பொதுவாக பிரபலங்கள் குறித்த எந்த விஷயமாக இருந்தாலும் அது வைரலாகி விடும்.

 

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை காதலித்து அவரை பிரிந்த பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு தற்போது ஆரத்யா, என்கிற பெண் குழந்தை உள்ளது. ஆரத்யாவும் போட்டோ கிராபர்கள் ஸ்டில் எடுக்கும்போது கியூட்டான சேட்டைகளை செய்து இணையத்தில் அவ்வப்போது வைரலாகுவார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் மம்முட்டியுடன் பேசிய காதல் வசனத்தை ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக் டாக் செய்த வீடியோ இணையத்தில் செம வைரலாகியது. பூனை கண்ணு, கூர் மூக்கு, செதுக்கி வைத்தாற்போன்ற கன்னம்,  உதடு என ஐஸ்வர்யாராய் விட அழகாக இருக்கும் இந்த பெண் மீது இளைஞர்களின் கவனம் ஒட்டுமொத்தமாக திரும்பியுள்ளது.

இந்நிலையில் இந்த பெண்ணிற்கு தற்போது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம் மலையாளத்தில் ஷேய்க் அப்சல் தயாரிப்பில் சுனில் காரியத்துக்கரா இயக்கத்தில் ‘பிக்காசோ’ என்ற படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கு முன்னரே சில விளம்பரத்திலும் மற்றும் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கூடிய விரைவில் இவர் தமிழ் படங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News