×

உல்லாசத்திற்கு மறுப்பு... புதுப்பெண் கொடூர கொலை.. கணவரின் வெறிச்செயல்...

லால்குடி அருகே புதுமணப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோவில் அடுத்துள்ள வாளவந்தபுரம் பகுதியில் வசிப்பவர் அருள்ராஜ்(27). இவர் 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும், ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும், லால்குடி அருகேயுள்ள மணக்கால் சூசையபுரம் பகுதியில் வசித்து வந்த முதுகலை பட்டதாரியான கிருஷ்டி ஹெலன்ராணிக்கும் இடையே கடந்த ஜூலை 10ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பின் அருள்ரஜ் வீட்டில் கூட்டுக்குடும்பம் நடத்தி வந்தனர். அதையே காரணம் காட்டி ஹெலன் தாம்பத்தியத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அருள்ராஜ் கோபத்தில் இருந்துள்ளர்.

குளிப்பது மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு போவது வழக்கம். நேற்று அதிகாலை 3 மணியளவில் குளிக்க சென்ற ஹெலன் வீடு திரும்பவில்லை. எனவே, அருள்ராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது ஆற்றை ஒட்டியுள்ள ஒரு பள்ளத்தில் ஹெலன் ஆடை எதுவுமின்ரி சடலாம கிடந்தார். அவர் அணிந்திருந்தகள் நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ஹெலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஹெலன் எதனால் கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அதேநேரம் 3 மணிக்கு குளிக்க செல்ல வேண்டிய அவசியம் என்ன போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

போலீசாரின் சந்தேகம் அருள்ராஜ் மீது திரும்பியது. போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்தான் மனைவியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாம்பத்தியத்திற்கு ஒத்துழைக்காத ஹெலனை குளிக்கும் சாக்கில் 3 மணிக்கு ஆற்றுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவிக்கலாம் என கருதி அவரை அருள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற ஹெலன் ஆடைகளை களைந்தபின், அருளின் ஆசைக்கு அவர் இணங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அருள் தண்ணீரில் அவரை மூழ்கடித்து கொலை செய்துள்ளார். மேலும், நகைக்காக கொலை சம்பவம் நடைபெற்றது போல் நகைகளை கழட்டிவிட்டு நாடகம் ஆடியுள்ளார் என்பது தெரியவந்தது. அதன்பின் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமனம் ஆகி 50 நாளில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News