Connect with us

Cinema News

மருத்துவரை அடிக்க பாய்ந்த ரஜினிகாந்த்… அதுவும் அவர் அம்மாவுக்காக… என்ன நடந்தது தெரியுமா?

Rajinikanth: பொதுவாக இப்போது இருக்கும் ரஜினிக்கு நேர் எதிரானவர் தான் 80ஸ் ரஜினிகாந்த். அவருக்கு இல்லாத பழக்கம்  இல்லை. பல நேரங்களில் ரஜினிக்கு போதை நிலையிலே இருப்பாராம். அதனால் அடிக்கடி கோபப்படுவார். அப்படி இருந்த போது நிறைய பிரச்னைகள் செய்தாராம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் சினிமாவில் உயர்ந்து கொண்டு இருந்த சமயம் அவருக்கு ஆதரவாக இருந்தவர் ரெஜினா வின்சென்ட். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பில் அவரை பார்த்த ரஜினிக்கு முதல் பார்வையே அம்மாவாக மானசீகமாக பாசம் வந்துவிட்டது. இதனால் அடிக்கடி அவரை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்து இருப்பாராம்.

இதையும் படிங்க: வைரமுத்துவை கழட்டிவிட இளையராஜா பார்த்த வேலை!.. இப்படிப்பட்டவரா இசைஞானி!…

அந்த நேரத்தில் தான் ரஜினிகாந்துக்கும் போதை பழக்கமும் அதிகமாக இருந்ததாம். அப்படி ஒருநாள் விஜயா மருத்துவமனையில் இருந்து ரெஜினா அம்மாவுக்கு கால் செய்து ரஜினிகாந்த் இங்கு இருக்கிறார். அம்மாவை பார்க்க வேண்டும் என்கிறார். உங்க பெயரை சொல்லி அழைக்க சொன்னார் என்றார்களாம். விஷயம் புரியாதவர் நேராக மருத்துவமனை சென்று பார்க்க ரஜினி சத்தம் போட்டு கொண்டு இருந்தாராம்.

ரெஜினாவை பார்த்ததும் அமைதியாகி விட மருத்துவர்களிடம் கேட்டவர் தன்னுடன் ரஜினியை வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். அதுவரை தூக்கமில்லாமல் தவித்த ரஜினி அவர் வீட்டில் படுத்து அமைதியாக உறங்கிவிட்டாராம்.  அதன் பின்னர் மன உளைச்சலாக இருக்கும் நாளில் வந்து கேட்காமல் அவருக்கு இருக்கும் ரூமில் தூங்கிவிடுவாராம். மருத்துவத்தால் கூட சரி பண்ண முடியாத ரஜினியை ரெஜினா அம்மாவால் தான் சரியானார் என்று அப்போதே மருத்துவர்கள் அவரை பாராட்டி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு பாடம் கற்பித்த இளையராஜா… அது சரி… ரெண்டுபேருக்கும் ஆசான் யாரு தெரியுமா?

பின்னர் மருத்துவரை காண அப்பாயின்மெண்ட் வாங்கப்படுகிறது. ரஜினிக்காக மருத்துவமனையில் ரெஜினா வின்சென்ட் காத்திருக்க தள்ளாடியப்படியே வந்தாராம். அவருக்கு மருந்து கொடுத்து டாக்டர்கள் ஒரு அறையில் படுக்க சொல்லினார்களாம். அவருடன் இருந்த ரெஜினா அம்மாவை வெளியில் போக சொல்லிவிடுகிறார் துணை மருத்துவர். அவரும் வெளியேறிவிடுகிறார்.

ஆனால் ரஜினி இதை தவறாக புரிந்து கொண்டு அந்த மருத்துவரை அடித்து ரகளை செய்துவிட்டாராம். இதை பார்த்த ரெஜினா அம்மா கடுப்பாகி வீட்டுக்கு சென்றுவிடுகிறார். அவர் பின்னாடியே ரஜினி சென்று அவன் உங்களை அவமானம் படுத்தலாமா? அதான் செஞ்சேன் என்றாராம்.

ஆனால் நடந்தது அதுவல்ல. அவர் எனக்காக தானே சொன்னார் என்பதை புரிய வைத்த பிறகே ரஜினி நான் செஞ்சது தப்பு தான்மா என ஒப்புக்கொண்டு இருக்கிறார். இன்றளவும் ரஜினி வீட்டில் இருக்கும் புகைப்படங்களில் ரெஜினா வின்சென்ட்  புகைப்படமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பார்க்க ரவுடி மாதிரி இருக்கார் இவரு டைரக்டரா?!.. பாரதிராஜாவை பார்த்து பயந்த ராதிகா!…

Continue Reading

More in Cinema News

To Top