×

திருமணம் ஆன பெண்ணுடன் உறவு.. கடைசியாக எடுத்த செல்பியில் உயிரை விட்ட பரிதாபம்!

பெங்களூரில் ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வரும் ஆம்பூர் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த கோதாண்டன் மகன் ராமதாஸ் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் புதூர் பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
 

வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்ட இந்த ஜோடிக்கு இரு வீட்டிலிருந்து கடும் எதிர்ப்பு வரவே தற்கொலை செய்வதென முடிவெடித்து தண்டவாளத்தில் ஜோடியாக படுத்து உயிரை விட்டுள்ளனர்.

தற்கொலைக்கு முன் இருவரும் ஜோடியாக ஒரு செல்கி எடுத்துக்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து வந்த ரயில்வே போலீசார் இரு சடலங்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இவர்கள் சடலம் அருகில் கிடந்த செல்போனை வைத்துதான், அந்த கடைசி செல்பியை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போதுதான் நந்தினிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாம்.. ஒரு வருஷத்துக்கு முன்பு பச்சூர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவருடன் கல்யாணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்களாம்.. இதனால்தான் ராமதாஸ் வீட்டில் திருமணத்தை ஏற்கவில்லை என்று முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News