
Cinema News
எவனோ புரளியை கிளப்பிவிட்டான்… இப்ப நான் சிக்கி கிட்டேன்.. இயக்குனரிடம் புலம்பிய கவுண்டமணி!..
Published on
By
தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவர்கள் கவுண்டமணி செந்தில். இவர்கள் இருவரும் இல்லாமல் தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதவே முடியாது. அந்த அளவிற்கு ஒரு காலகட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்தவர் கவுண்டமணி.
அவர் பெயர் கவுண்டமணி என்று ஆனதற்கு ஒரு காரணம் உண்டு. யாரைப் பார்த்தாலும் கவுண்டர் அடித்து விடுவார் என்பதால் அவரை கவுண்டர் மணி என்று அழைத்தார்கள். பிறகு கால போக்கில் அதுவே கவுண்டமணி ஆனது.
கவுண்டமணி படங்களில் வருவது போலவேதான் நிஜ வாழ்க்கையிலும்.எந்த ஒரு நடிகரையும் முகத்துக்கு முன்னால் கலாய்த்து விடுவார் கவுண்டமணி. நடிகர் சத்யராஜ் கூட ஒரு பேட்டியில் இதைப்பற்றி கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் இயக்குனர் கஸ்தூரி ராஜா அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது கவுண்டமணியுடன் அவருக்கு இருந்த பழக்கம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் கூறும் பொழுது ”ஒரு முறை கவுண்டமணிக்கு உடல்நிலை மிகவும் சரியில்லை என்கிற செய்தி வந்தது.
”எனவே நான் எனது படக்குழுவை அழைத்து கவுண்டமணியை பார்த்து வருமாறு கூறினேன். பிறகு நானே கவுண்டமணிக்கு போன் செய்து என்ன கவுண்டமணி உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது? என கேட்டேன்.
அதற்கு அவர் பதிலளிக்கும்போது ”எவனோ ஒருத்தன் எனக்கு உடம்பு சரி இல்லன்னு புரளியை கிளப்பி விட்டுட்டான். லாரில சொந்தக்காரங்க கிளம்பி வராங்க. எல்லாருக்கும் இப்ப நான்தான் சோறு ஆக்கி போடணும் என கூறியுள்ளார்” அந்த நிகழ்வை கஸ்தூரிராஜா அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: புகழின் உச்சிக்கே போனாலும் கர்வம் இல்லாத ஏஆர்.ரஹ்மான் – ‘மாமன்னன்’ இயக்குனரை மெய்சிலிர்க்க வைத்த தருணம்!
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...