Connect with us
rhema ashok

latest news

சுத்தி எல்லாரும் இருப்பாங்க.. அங்கேயே ட்ரஸ் மாத்த சொன்னாங்க!.. கதறும் சீரியல் நடிகை..

பிரபல சீரியல் நடிகையும், டான்சரும், மேக்அப் ஆர்ட்டிஸ்டுமான ரேமா அசோக், பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார், மேலும் சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் டான்சர்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றி பேசியுள்ளார் ரேமா அசோக். கோயில் விழாக்களுக்கு, திருமண நிகழ்ச்சிகளுக்கெல்லாம் டான்சர்கள், பாடகர்களை கூப்பிடுவார்கள்.

ஆனால் பாடகர்களுக்கு போக்குவரத்து, தங்கும் இடம் என எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துகொடுப்பார்கள், டான்சர்களுக்கு உணவு கூட கொடுக்க மாட்டார்கள். உடை மாற்ற ஒரு ரூம் கூட இருக்காது. பலர் கூடி இருக்கும் பொது இடத்தில், அப்படியே ஒரு ஸ்கிரீன் கட்டி, துணி மாற்றிக்கொள்ள சொல்வார்கள். பொதுவாகவே, பாடகர்களுக்கு கொடுக்கும் மரியாதை, டான்சர்களுக்கு இல்லை, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இல்லை.

பாடலை எழுதியவர்கள், பாடியவர்களை எல்லாம் மிகவும் மரியாதையாக நடத்துகின்றனர். ஆனால், அந்த பாடல்களுக்கு டான்ஸ் ஆடினால் அவர்களை இழிவாக பேசுகின்றனர். ஊ சொல்றியா மாமா, காவாலையா போன்ற பாடல்களை எழதியவர்களை, அந்த பாடல்களை பாடியவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அதற்கு டான்ஸ் அடுபவர்களை பற்றி தரைகுறைவாக விமர்சிக்கின்றனர்.

சமந்தாவுக்கே இந்த நிலைமை என்றால், எங்களை போன்றவர்களின் நிலமை அதை விட மிகவும் மோசமாக தானே இருக்கும் என்று கூறியுள்ளார். பாடலை பாடுவதை போலவே, ஆடுவதும் ஒரு கலை தான். எல்லாவற்றையும் ஒரே மாதிரி மதிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று நடிகை ரேமா அசோக் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

author avatar
prabhanjani
Continue Reading

More in latest news

To Top