×

எளிமையாக நடந்த ரெமோ இயக்குனரின் திருமணம் – சிவகார்த்திகேயன் நேரில் சென்று வாழ்த்து!

இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் திருமணம் சில நாட்களுக்கு முன்னர் எளிமையாக நடந்துள்ளது.

 

இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் திருமணம் சில நாட்களுக்கு முன்னர் எளிமையாக நடந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமொ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாக்யராஜ் கண்ணன். அந்த படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாகக் கையைக் கடிக்கவில்லை என சொல்லப்பட்டது. அதையடுத்து அவர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில்  பாக்யராஜ் கண்ணன் ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமனத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கார்த்தி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News