Categories: Cinema News latest news

பட்டை நாமம் விவகாரம்… மணி சாரை கடுப்பேற்றிய பத்திரிக்கையாளர்..

மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இதில் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளிவருகிறது.

இதில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

“பொன்னியின் செல்வன்” நாவலை எம்ஜிஆர் காலத்தில் இருந்து பலரும் படமாக்க முயன்றனர். ஆனால் அந்நாவலை படமாக்க முயன்றாலே அபசகுணம் என ஒரு கதை சினிமா வட்டாரத்தில் பரவி வந்தது. இந்த நிலையில் தான் மணி ரத்னம் இதனை சாத்தியமாக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என செய்திகள் தெரிவிக்கின்றன. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான புரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக Pre release event நடைபெற்றது. இதில் மணி ரத்னம், ஜெயம் ரவி, த்ரிஷா என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் அங்கே கூடியிருந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் இயக்குனர் மணி ரத்னத்திடம் பட்டை நாமம் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மணி ரத்னம் “நீங்கள் இந்த விசயத்தை தான் கவனிப்பீர்கள் என நன்றாக தெரியும். ஒரு டிரைலரை வைத்து இதனை முடிவு செய்யமுடியாது. படம் வெளியான பிறகு இதனை நீங்களே பார்க்கத் தான் போகிறீர்கள். நாவலில் என்ன இருக்கிறதோ, அதை தான் நாங்கள் அப்படியே படத்தில் காட்டியிருக்கிறோம்” என கூறியுள்ளார்.

பட்டை நாமம் விவகாரம்:

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த போதே இந்த பட்டை நாமம் விவகாரம் சூடுபிடித்தது. சோழர்கள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள். சிவன் பக்தர்கள். ஆனால் விக்ரமின் நெற்றியில் நாமம் இருக்கிறது என ஒரு சாரார் கூறிவந்தனர்.

எனினும் வரலாற்றுப்படி சோழர்கள் சைவம், வைணம், பௌத்தம் போன்ற மதங்களை அரவணைத்தே சென்றனர். இணையத்தில் இந்த இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக அதனை தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Arun Prasad
Published by
Arun Prasad