Categories: Cinema News latest news throwback stories

“ஜெயலலிதா இன்னைக்கு விரதம்”… வதந்தியை கிளப்பிய பத்திரிக்கையாளர்… அழைத்து வந்து வெளுத்தெடுத்த புரட்சித் தலைவி…

தமிழின் முன்னணி நடிகையாவும், தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் ஆளுமை பண்பை குறித்து நாம் அனைவரும் அறிவோம். தனது வாழ்நாளில் எந்த தருணமாக இருந்தாலும் மிகவும் வெளிப்படையாக மனதில் தோன்றியதை பேசக்கூடியவர் ஜெயலலிதா.

Jayalalitha

அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே அப்படிப்பட்ட தைரியப் பெண்மணியாகவே இருந்திருக்கிறார். அவர் நடிகையாக இருந்தபோது ஒரு பத்திரிக்கை நிருபர் அவரது சக நடிகரான ரவிச்சந்திரனை குறித்து கேட்டபோது “ஒரு கதாநாயகனுக்கான தோற்றம், நடனம் எல்லாம் சிறப்பாக அமையப்பெற்றவர் ரவிச்சந்திரன். அவர் என்னுடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் முதல் திரைப்படத்தில் அவர் நடிக்கும்போது இருந்த ஆர்வத்தை பின்னாள் வந்த எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை. அந்த ஆர்வம் மட்டும் அப்படியே இருந்திருந்தால், ரவிச்சந்திரன் இன்னும் மிகப்பெரிய இடத்திற்கு வந்திருப்பார்” என தனது கருத்தை மிகவும் வெளிப்படையாக கூறினாராம். இச்சம்பவத்தை அவரது தைரியமான பேச்சுக்கு எடுத்துக்காட்டான சம்பவமாக கூறலாம்.

இந்த நிலையில் அவர் சினிமாவில் கொடிகட்டி பறந்த காலத்தில் ஒரு பத்திரிக்கையாளர் தனது பத்திரிக்கையில் “ஜெயலலிதா ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் முருகனுக்கு விரதம் எடுப்பார். ஆதலால் அவர் செவ்வாய்க்கிழமை மதிய வேளை மட்டும் சாப்பிடமாட்டார்” என எழுதி பிரசுரித்து விட்டார். விரதம் எடுப்பது நல்ல விஷயம்தானே, ஆதலால் ஜெயலலிதா நம் மேல் கோபம்கொள்ளமாட்டார் என நினைத்து அதனை எழுதிவிட்டாராம் பத்திரிக்கையாளர்.

Jayalalitha

இந்த விஷயம் ஜெயலலிதாவிற்கு தெரியவர மிகுந்த கோபம் கொண்டாராம். ஒரு நாள் ஒரு படப்பிடிப்புத் தளத்தில் அந்த பத்திரிக்கையாளரை பார்த்தாராம் ஜெயலலிதா. அவரை தனியாக அழைத்து “நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை விரதம் எடுப்பார் என எழுதிவிட்டீர்கள். என்றாவது செவ்வாய்க்கிழமை படப்பிடிப்புத் தளத்தில் உணவு உண்ண நேர்ந்தால், அதனை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள். ஆதலால் என்னை பற்றி எந்த செய்தியாக இருந்தாலும் என்னிடம் முதலில் கேட்டுவிட்டு எழுதுங்கள்” என கோபமாக கூறினாராம் ஜெயலலிதா. ஜெயலலிதா இந்த செய்தியை கண்டுகொள்ள மாட்டார் என நினைத்த பத்திரிக்கையாளருக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை தந்தது.

Published by
Arun Prasad