×

உன்னால தறுதல ஆனேனே... ரேஷ்மாவை பார்த்து இதயத்தை தொலைத்த ரசிகர்கள்!

குழந்தை பருவ புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் ரேஷ்மா

 
வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.'

தொடர்ந்து கடுமையாக உடற்பயிற்சி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் சிறு வயது புகைப்படங்களின் தொகுப்பை வீடியோவாக வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். குழந்தையிலும் புசு புசுன்னு இருக்கும் புஷ்பாவை பார்த்து ரசிகர்கள் இதயத்தை தொலைத்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News