ரேஷ்மா பசுபுலேட்டியின் ‘மைனஸ்’ இதுதானாம்!.. அவரே நோட் பண்ணிக் காட்டுறாரேப்பா!..
சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, தனது ஜிம் உடற்பயிற்சியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதனுடன் அவர் பகிர்ந்துள்ள ஊக்கமூட்டும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரேஷ்மா பசுபுலேட்டி, தமிழ் தொலைக்காட்சி உலகில் பல்வேறு தொடர்களின் மூலம் பிரபலமானவர். குறிப்பாக பாகியலட்சுமி, வம்சம், வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய் உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். பின்னர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது சின்னத்திரை மற்றும் டிஜிட்டல் தளங்களில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ரேஷ்மா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் தொடர்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "எனது தோற்றத்தை மட்டும் பார்க்காதீர்கள். அதற்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பு, ஒழுக்கம், நான் தூக்கிய பளுக்கள், கடந்து வந்த வலிகள், உடல் தேறிய விதம் மற்றும் எனது எல்லைகளைத் தாண்டி செயல்பட்ட முயற்சிகளைப் பாருங்கள். எனக்குத் தேவையான உதவிகள் கிடைத்தன. ஆனால் அதே நேரத்தில் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டேன். பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் வலிமையானவர்கள். என்னால் இதைச் செய்ய முடிந்தால், நிச்சயமாக உங்களாலும் முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தங்களது இலக்குகளை அடைய தேவையான உதவிகளைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர் ரசிகர்களுக்கு ஊக்கமளித்துள்ளார். இந்த பதிவு பல பெண்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. உடலழகை விட கடின உழைப்பின் மதிப்பை வலியுறுத்திய ரேஷ்மாவின் இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் பலருக்கும் ஊக்கமளிக்கும் பதிவாக மாறியுள்ளது.
