×

மூடிட்டு பாலோ பண்ணு... நான் அப்படிதான் டிரஸ் போடுவேன்... காண்டான ரேஷ்மா?

வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் மாதிரி, நடித்த ரேஷ்மா தன் சமூக வலைப்பக்கத்தில் நெகடிவாக கமெண்ட் செய்பவர்களை பற்றி காட்டமாக விமர்சித்துள்ளார்.

 
reshma-pasupuleti-blouse-saree-photos (1)

வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் மாதிரி, நடித்த ரேஷ்மா தன் சமூக வலைப்பக்கத்தில் நெகடிவாக கமெண்ட் செய்பவர்களை பற்றி காட்டமாக விமர்சித்துள்ளார்.

“நெகடிவ் கமண்ட்ஸ் பதிவிடுவது நெகடிவாக பேசுவது, உடல் மற்றும் முகம் தொடர்பான அருவருத்தக்க விஷயங்களை கமெண்ட் பண்ணுவது, எந்த செலிபிரிட்டியாக இருந்தாலும் எந்த போஸ்டாக இருந்தாலும் அங்கு வந்து தவறாகவும் மோசமாகவும் மனிதாபிமானமில்லாமலும் எழுதுவது உள்ளிட்டவை தொடர்கின்றன. 

ஃபேக் ஐடிக்களில் இருந்து வந்து இப்படி எழுதுவதை பொதுவாக நான் படிப்பதில்லை, இருப்பினும் குடும்ப நண்பர்கள் எல்லாம் படிக்கிறார்கள். இப்படியெல்லாம் ஒரு நபரை பற்றி தவறாகவும் அவருக்கு கொரோனா வரவேண்டும், தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என ஏகத்துக்கும் எழுதுகிறார்கள்.

நான் அமெரிக்காவில் படித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்தேன். இந்தியாவில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்கிறேன். இந்த கொரோனா லாக்டவுனில் என்னால் முடிந்த அளவில் பாசிடிவான எண்ணங்களை எனக்கும் மற்றவர்களுக்குமானதாக விதைக்கிறேன்.

நெகடிவாக வந்து கமெண்ட் பண்ணுகிறவர்கள் யார் பேஜை பின் தொடரவேண்டுமோ மூடிக்கிட்டு போய் ஃபாலோ பண்ணுங்க. எவனும் அப்படி வந்து எனக்கு கமெண்டுகளை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

சோஷியல் மீடியாவில் ஆர்டிஸ்ட்டுகளை பற்றி அசிங்கம் அசிங்கமாக எழுதுவதை நிறுத்திவிட்டு சோஷியல் மீடியாவை நல்லதற்கு பயன்படுத்துங்கள். எங்கள் பேஜ்களை விட்டுவிட்டு உங்களது வேலையை பாருங்கள். இந்த மாதிரி ஆட்கள் எவனும் எனக்கு சோறு போடல. என் முகம் எப்படி இருக்கு? நான் என்ன டிரெஸ் போட்டு புகைப்படம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News