மூடிட்டு வந்து நடிக்க சொல்லுடா ம*று.. எருமை சாணி விஜய் மனைவி செய்த மோசடி.. கதறி அழும் ரெசார்ட் நடிகை
எருமை சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமான விஜயகுமார் நடிப்பில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ரெசார்ட் வெப் சீரிஸ் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த சீரிஸில் நடித்து வரும் ஒரு நடிகை தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாட்ஸ்டாரில் வார வார வெள்ளிக்கிழமையன்று நான்கு எபிசோடுகளாக ஒளிப்பரபாகிகொண்டிருக்கும் ரெசார்ட் சீரிஸ் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சீரிஸ், ஒரு லக்சுரி ரிசார்ட்டில் வேலை செய்யும் சாதாரண ரூம் சர்வீஸ் பணியாளரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
கதாநாயகன் படிக்காமல் ரூம் சர்வீஸ் பாயாக வேலை செய்துக்கொண்டிருக்கிறார் ஆனால் அவர் ஒரு பெரிய ஷெஃப் ஆக வேண்டும் என்ற கனவை அடைய முயற்சிக்கிறார். அதனால் ரிசார்ட்டின் கடுமையான சமையலறை அரசியல் மற்றும் மேலாளர் எதிர்ப்பு போன்ற சவால்களை எதிர்கொள்கிறார்.
இது “சாதாரண மனிதன் , பெரிய கனவு , கடின உழைப்பு” என்ற பயணத்தை ரசிக்க வைக்கும் ஒரு ஃபீல் குட் சீரிஸாக உள்ளது. இந்த வெப்சீரிஸில் தலைவாசல் விஜய், மஹிமா நம்பியார், அபிநயா நேத்ரன், லல்லு, தன்யா பல்லத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
கேரளாவின் ஒரு சிறிய கிராமத்த்தில் இருந்து சினிமாவில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் இந்தத் துறைக்குள் வந்தத நடிகை அனுகிரகா நம்பியார் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி, ரெசார்ட் வெப் சீரிஸில் அவரை நடிக்க வைத்ததாகவும், ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்து பெறப்பட்டதால், வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட முடியாத நிலைக்கு தன்னை கட்டுப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார். ஆனால் கடந்த ஏழு மாதங்களாக படப்பிடிப்பிற்கு அழைப்புகள் மிகக் குறைவாகவே வந்துள்ளதால், தன்னை ஏமாற்றியதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது தனது நண்பர் தயாரிப்பு தரப்பிடம் நிலுவை தொகையை கேட்டபோது, அவர்களிடம் இருந்து அவமதிப்பான பதில் வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தயாரிப்பு தரப்புடன் தொடர்புடைய விஜயகுமாரின் மனைவியான நக்ஷத்திரா அநாகரீகமாக பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவங்களைப் பற்றி அவர் சமூக வலைதளங்களில் லைவ் வீடியோவில் பகிர்ந்து, தனக்கு ஏற்பட்ட மனவேதனையால் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
இவரது குற்றச்சாட்டுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் ராஜேந்திரன் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேள்விகளை எழுப்பி விளாசி வருகின்றனர். இதற்கு மேல், இண்டஸ்ட்ரியை விட்டுப் போனாலும் பரவாயில்லை இதற்கு ஒரு முடிவு தெரிய வேண்டும் என அனுகிராகா ஆவேசமாகி உள்ளார்.
