ரெட்ரோ டீஸரில் யாரெல்லாம் இத கவனிச்சீங்க? கங்குவா அலையே இன்னும் ஓயல.. அதுக்குள்ள இதுவா?

by Rohini |
retro
X
retro

சூர்யாவின் ரெட்ரோ:

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரெட்ரோ என பெயரிடப்பட்ட அந்த படத்தின் டீசர் ரசிகர்களை ஓரளவு கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தின் மீது ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கு காரணம் கங்குவா திரைப்படம். அந்தப் படத்தின் மீது பல நெகடிவ் கமெண்டுகள் வரிசையாக வந்த வண்ணம் இருந்தன.

மேலும் சூர்யா ஒரு நல்ல ஹிட் படத்தை கொடுத்து கிட்டத்தட்ட 11 வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை எப்போது கொடுப்பார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் தான் கங்குவா திரைப்படம் ஒரு பெரிய அலையாக வந்தது. ஆனால் வந்த வேகத்தில் ஓய்ந்து போனது என்று தான் சொல்ல வேண்டும். படம் அந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதனாலயே சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

இப்படி யாராவது காதலை சொல்வார்களா?

இந்த நிலையில் தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தைப் பற்றிய அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கேற்ற வகையில் அந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது அந்தப் பெண்ணிடம் காதலை தானே சொல்கிறார் சூர்யா. அப்போது கூட கொஞ்சம் சிரித்த முகத்துடன் சொல்லி இருக்கலாம்.

எப்பேற்பட்ட பெரிய ரவுடியாக இருந்தாலுமே காதல் சொல்ல வரும் பொழுது இப்படி மூஞ்சியை உர்ருனு வைத்துக்கொண்டா சொல்வார்கள்? ஏதோ காண்டாமிருகம் சூப் குடித்ததை போல முகத்தை கோரமாக வைத்துக்கொண்டு காதலை சொல்கிறார். இதெல்லாம் ஏற்புடையதாகவா இருக்கிறது. கதைக்கு தேவைப்பட்டால் கூட இப்படியா பண்ணுவீங்க? இன்னும் சூர்யா அந்த ஆக்சன் ஹீரோ என்ற வளையத்தில் இருந்து அவர் வெளியே வரவே இல்லை .

ரஜினியின் ரெஃபரன்ஸ்:

அதிலிருந்து கொஞ்சம் வெளியே வந்தால்தான் நன்றாக இருக்கும். ஒரு காலத்தில் காதல் மன்னனாக அறியப்பட்டவர் சூர்யா. அப்படிப்பட்ட சூரியாவை பார்த்து வெகு நாளாகி விட்டது என்று அந்தணன் கூறினார். அதுமட்டுமல்ல கார்த்திக் சுப்பராஜ் அவர் எடுக்கும் படங்களில் ரஜினியின் ரெஃபரன்ஸ் ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக இருக்கும் என பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதைப்போலத்தான் இந்த படத்திலும் ரஜினியின் ஜானி படத்தின் ரெஃபரன்ஸ் இருக்குமோ என்ற வகையில் ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த படத்தில் சூர்யாவின் கெட்டப் அவருடைய தலையை வளித்து வாரி இருப்பார். அது ஜானி கெட்டப் மாதிரி தான் இருக்கிறது. மேலும் இந்த படத்தின் டீசரில் பார்க்கும்போது ஒரு டான், மிகவும் ஈவு இரக்கம் இல்லாத ஒரு டான். தன் மனைவிக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாந்தமாக மாற போவதாக சொல்கிறார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது என்ன மாதிரியான கதை என்று நம்மால் சொல்ல முடியவில்லை,


ஒரு நாகர்கோயில் பின்னணியில் இந்த படம் போகிறதா? கோவா பின்னணியில் போகிறதா என்று கூட யூகிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு ஜானி என்று தான் பெயர் வைக்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் ஜானி என்ற பெயர் வைத்திருந்தால் இந்த படத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும். ஏனெனில் கார்த்திக் சுப்பராஜ் ஒரு மிகப்பெரிய ரஜினியின் ரசிகர். அதனால்தான் என்னவோ ரஜினி நடித்த ஜானி படத்தில் ரஜினியின் ஸ்டைலை இங்கு சூர்யாவிற்கு பயன்படுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

Next Story