‘சின்ன சின்ன வண்ணக்குயில்’ பாடிய ரேவதியா இது? ஆளே மாறிட்டாங்களே
ரேவதி:
நடிகைகள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையை மாற்றியவர் நடிகை ரேவதி. அதாவது ஹீரோயின் என்றாலே கிளாமர் இருக்க வேண்டும், மாடர்ன் டிரஸ் அணிய வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகளை தளர்த்தி முற்றிலும் ஹோம்லியான லுக்கில் எந்தவித கவர்ச்சியும் காட்டாமல் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக ஒரு தனித்துவமான நடிகையாக இருப்பவர் நடிகை ரேவதி.
80களில் இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கண்டது, குறிப்பாக அந்தக் காலத்தில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து டூயட் பாடியிருக்கிறார் ரேவதி. ரஜினியில் இருந்து கமல், பிரபு, கார்த்திக் என அனைவருடனும் நடித்து புகழ் பெற்றார். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் ரேவதி.
பரதத்தில் கைதேர்ந்தவர்:
நடனத்தின் மீது அலாதி அக்கறை கொண்டவர். அம்மாவின் தூண்டுதலின் பேரில்தான் பரதமும் பயின்றார். பரதத்தில் இவர் ஆடும் நடனம் ஒரு தனி நலினத்தையே ஏற்படுத்தும். இவர் பள்ளி பருவ வயதில் இருக்கும் போதுதான் மண்வாசனை படத்தின் வாய்ப்பு இவரை தேடி வந்தது. பாரதிராஜா அந்தப் படத்திற்காக ரேவதியை நாடிய போது நான் நடிகையா என்று கேட்டு வியந்தவர் ரேவதி.
முழுக்க முழுக்க நகரத்திலேயே பிறந்து வாழ்ந்தவர் என்றாலும் கவர்ச்சிக்கு நோ சொன்னவர் ரேவதி. ஆரம்பத்தில் தமிழ் பேசுவதில் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார் ரேவதி. அதனால் மண்வாசனை படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு வசனத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் பேசியிருக்கிறார். மண்வாசனை படம் அவருக்கு நல்ல ஒரு பெயரை வாங்கிக் கொடுத்தது.
மீண்டும் பாரதிராஜாவுடன் கூட்டணி:
அதே பாரதிராஜா மீண்டும் ரேவதியை வைத்து இயக்கிய திரைப்படம் புதுமைப் பெண். ரேவதியின் திறமையான நடிப்பால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவரை தேடி வர அதன் பிறகு சினிமாவில் கொடி கட்டி பறந்தார் ரேவதி. இப்படி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ரேவதி 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 4 படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.
சமீபகாலமாக படங்களை இயக்கும் முயற்சியில்தான் இருக்கிறார் ரேவதி. இந்த நிலையில் ரேவதியின் லேட்டஸ்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் முற்றிலும் வித்தியாசமாக காணப்படுகிறார்.