×

மகனை கொன்றதால் பழிக்குப்பழி... ரவுடி தலையை துண்டித்த தந்தை....

திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கத்தை வசித்து வந்தவர் ரவுடி மாதவன். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.  கடந்த வருடம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் 2 ரவுடிகள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.சமீபத்தில் அவர் ஜாமினில் வெளியே வந்தார். 
 

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே மாதவனின் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசாரின் விசாரணையில் மாதவன் கொலை செய்த கல்லூரி மாணவன் ஆகாஷின் தந்தை ரமேஷ், பழிக்குப்பழி வாங்கவே கூலிப்படை மூலம் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ரமேஷ் மற்றும் மூன்று கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். அதில் 2 பேர் 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்பதால் அவர்களை போலீசார் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News