Connect with us

latest news

Bhairavam: அதிதி ஷங்கரின் நிலைமை இப்படி ஆகிப்போச்சே? பாஸ்? பெயிலா பைரவம் பட விமர்சனம்!

Bhairavam: பைரவம் தெலுங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், அதிதி சங்கர், திவ்யா உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர்.

பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த இப்படம் இன்று திரைக்கு வந்து இருக்கிறது. கஜபதி வர்மா (மஞ்சு மனோஜ்) மற்றும் வரதா (நாரா ரோஹித்) சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

ஒரு முக்கிய நிகழ்வுக்குப் பிறகு, சீனு (பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ்) என்ற ஆதரவற்ற பையனாக இவர்களுடைய வாழ்க்கையில் இணைகிறார். ஒரு சக்திவாய்ந்த மந்திரி (ஷரத் லோஹிதாஸ்வா) கோயிலின் நிலத்தை பிடிக்க திட்டமிடுகிறார்.

அதற்காக அவர் சிஐ பார்த்தசாரதி (சம்பத் ராஜ்)யைச் சேர்த்துக் கொள்கிறார். இந்த சூழ்நிலை மோசமடைந்தவுடன், நண்பர்களுக்குள் நம்பிக்கை உடைந்து, துரோகிகளாக மாறுகின்றனர். அதன் பிறகு நிகழும் பிரச்னைகளை இந்த கதை சொல்லுகிறது.

பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை இந்தப் படத்தில் வழங்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ஏகப்பட்ட உணர்ச்சிகளை காட்ட அதை சரியாக கையாண்டு இருக்கிறார்.

நாரா ரோஹித் அமைதியும், அழுத்தமுமாக தன்னுடைய நடிப்பால் கவனம் பெறுகிறார். மஞ்சு மனோஜ் நடிப்பு எப்போதும் போல திரையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காமெடி பெரிய அளவில் ரீச் இல்லை என்றாலும் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக இடைவேளைப் பகுதியில் வரும் காட்சி மற்றும் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கும் டிரான்ஸிசன் காட்சி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே கதையைப் புரிந்து கொள்ளலாம். திரைக்கதை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. முதல் பாதி சுமாராக ஓடினாலும், இரண்டாம் பாதியில் படத்தின் வேகம் மந்தமாகிவிடுகிறது. குறிப்பாக ஆதிதி சங்கருக்கு வெறும் சில பாடல்கள் மற்றும் முக்கியமில்லாத காட்சிகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

இசை முதல் எடிட்டிங் வரை எல்லாமே சுமார் ரகம் தான். மிகவும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் ஒருமுறை பார்க்கக்கூடிய படம்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top