Connect with us

latest news

மார்கன் ஒரு ரெண்டும் கெட்டான் படம்? இவ்ளோ இருந்தும் வேலைக்கு ஆகலையே! புளூசட்டைமாறன் பொளேர்!

Vijay Antony நடிப்பில் நேற்று வெளியான மார்கன் படத்தைப் பற்றி பிரபல யூடியூபர் புளூசட்டைமாறன் விமர்சனம் செய்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

லியோ ஜான் பால் இயக்கிய படம் மார்கன். படத்தோட ஆரம்பத்துல நைட்ல ஒரு பொண்ணை இன்ஜக்ஷன் போட்டுக் கொலை பண்றாங்க. இந்த இன்ஜக்ஷன் என்ன பண்ணுதுன்னா உடம்பை எல்லாம் கருப்பாக்கிடுது. இந்த செய்தி பேப்பர்ல வருது.

இதை பாம்பேல உள்ள ஹீரோ பார்த்துட்டு இந்த கேஸ் மாதிரி வேற ஒண்ணை அவர் அட்டண்ட் பண்ணினதால இந்த கேஸ் மேல இன்ட்ரஸ்ட்ஸ் எடுத்து சார்ஜ் எடுக்கிறாரு. விசாரிக்கிறாரு. எந்த ஒரு க்ளூவும் கிடைக்க மாட்டேங்குது. ரோட்ல இருக்குற சிசிடிவி ஃபுட்டேஜ் வைச்சி ஒரு க்ளூவை எடுக்கிறாரு. அதன்படி ஒரு பையனை பிடிக்கிறாரு.

அவன் கொலையாளியா இல்லையான்னு கண்டுபிடிக்கற போது அவன்கிட்ட ஒரு தனித்திறமை இருக்குன்னு தெரியுது. ஆனா கொலைகாரன் அவன் இல்லை. அந்தப் பையனை வச்சி படத்துல கொலையாளி யாருன்னு ஹீரோ கண்டுபிடிக்கிறாரு. இதுதான் கதை. படத்துல வர்ற பையன் போட்டோகிராபி மெம்மரி பவர் உள்ளவன்.

அவன் டைம் டிராவல் பண்றது எல்லாம் ஓவர். ஃபேன்டசி கதை இந்தப் படத்துக்குப் பொருந்தல. அப்புறம் படத்து மேல இருந்த நம்பிக்கையே போச்சு. படத்துல வழக்கமான டெம்ப்ளேட். கேஸை சால்வ் பண்ண முடியலன்னா ஹீரோ தான் இருப்பாரு. அவருக்கு அசிஸ்டண்ட் 3 பேரு. அதுல ஒரு லேடி போலீஸ், காமெடி பண்ற ஒரு போலீஸ்.

அந்த ஹீரோவுக்கு பெரிய பிளாஷ்பேக் இருக்கும். இதுக்குள்ளயே படம் அடங்கிப்போச்சு. படத்துல சில ஸ்பெஷல் ஐட்டம் வச்சிருந்தாங்க. அதுவும் படத்தைக் காப்பாத்தல. இல்லன்னா ஒரு நல்ல ஒரு மெசேஜையாவது வைப்போம்னு வச்சிப் பார்த்தாங்க. அதுவும் படத்தைக் காப்பாத்தல. ஒண்ணு இந்தப் படத்தை கிரைம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் படமா எடுத்துருக்கலாம். இல்லன்னா முழுக்க முழுக்க ஃபேன்டஸி படமா எடுத்துருக்கலாம். ரெண்டும் கெட்டானா எடுத்து, வேலைக்கு ஆகாத படமா எடுத்து வச்சிருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top