Connect with us

latest news

Criminal Justice: ஒருநாள் இரவால் குற்றவாளியான ஹீரோ… காப்பாற்றும் ஸ்மார்ட் லாயர்… கிரிமினஸ் ஜஸ்டிஸ் சீசன் 1

Criminal Justice: பாலிவுட்டின் பிரபல வெப் சீரிஸான கிரிமினல் ஜஸ்டிஸின் நான்காம் சீசன் ஒளிபரப்பாகி வருகின்றனர். இதில் முதல் சீசன் குறித்த திரைவிமர்சனத்தின் தொகுப்புகள் இங்கே.

ஹாட்ஸ்டாரில் 2019 ஏப்ரலில் வெளியான கிரிமினல் ஜஸ்டிஸ் வெப் சீரிஸ், இந்திய நீதிமன்ற அமைப்பையும், கைதிகளின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் கதையாக உருவாக்கப்பட்டது.

பிரபல நடிகர் விக்கிராந்த் மேஸ்ஸி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த தொடர், ஒரு சாதாரண டாக்ஸி டிரைவரின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் கொலை சம்பவம் மற்றும் அதன் பின்னர் நீதி போராட்டம் குறித்த கதை தான் இது.

இத்தொடரில் பங்கஜ் திரிபாடி நடித்த “மாதவ் மிஸ்ரா” என்ற வக்கீல் கதாபாத்திரம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சாதாரண முக பாவத்துடன் நீதிமன்ற வாதங்களிலும், காவல்துறை விசாரணைகளும், சிறை வாழ்க்கையையும் நுணுக்கமாக சொல்லி இருக்கின்றனர்.

மேலும் ஜாக்கி ஷ்ராஃப் சிறைக்குள் ஒரு முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார். இந்த தொடரின் வெற்றி, அதன் கதையின் உண்மை தன்மையை அப்பட்டமாக பேசி இருப்பது. நேர்த்தியான திரைக்கதையுமாக அமைந்துள்ளது.

மொத்தம் 10 அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடரை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். நான்காம் சீசன் முடியுறதுக்கு முன்னாடி இத பாருங்க.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top