Connect with us

latest news

கோலிவுட்டின் அடுத்த ஹிட் அதர்வாக்கு ரெடி… டிஎன்ஏ படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனம்

DNA: அதர்வா நடிப்பில் வெளியான இருக்கும் டிஎன்ஏ திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோ வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.

அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் இணைந்து நடித்துள்ளது டிஎன்ஏ திரைப்படம். இந்த கிரைம்-த்ரில்லர் படத்தை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகும் இந்த படம், குழந்தை பிறந்த பின் தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படும் அசாதாரணமான மனஅழுத்தங்கள் சார்ந்த கதையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அதர்வா இப்படத்தில் ஆனந்த் எனும் கதாபாத்திரத்திலும், நிமிஷா திவ்யா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், ரியத்விகா, கருணாகரன், போஸ் வெங்கட் மற்றும் சுப்பிரமணியன் சிவா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி இசையை கிப்ரான் வழங்கியிருக்க, பாடல்களை ஐந்து இசையமைப்பாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

அவர்களில் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிகரன் பிரவீன் சாய்வி, சாஹி சிவா மற்றும் அனல் ஆகாஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்படம் ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் மற்றும் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டு இருக்கிறது.

அதை பார்த்த விமர்சகர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள், மருத்துவமனையில் நடக்கும் திரில்லர் கதை. சரியாக திரைக்கதையை கையாண்டு இருக்கிறார் இயக்குனர். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை எங்குமே பெரிய தடுமாற்றமே இல்லை.

அப்பா கேரக்டரை அதர்வா சரியாக கையாண்டு எமோஷனல் காட்சிகளில் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகிறார். கதையை தொடக்கி வைக்கும் நிமிஷா ஒரு கட்டத்தில் அம்மாவாக தன்னை அழகாக மாற்றிக்கொள்கிறார்.

படத்தின் கதை வித்தியாசமாக அமைந்துள்ளது. அதிலும் பின்னணி இசை மிரள வைத்துள்ளனர். படத்தில் எந்த விறுவிறுப்பு குறையாமல் சரியாக நகர்த்து சென்று இயக்குனர் அப்ளாஸ் வாங்குகிறார். பாசிட்டிவ் அமசங்கள் தான் படத்தின் பெரிய பிளஸ் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் புக்கிங் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதர்வாவிற்கு அடுத்த ஒரு வெற்றி படமாக அமைந்து இருப்பதாக பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top