Connect with us

latest news

Housemates Review: அடிக்கிற பால் எல்லாம் சிக்ஸரா இருந்தா எப்படி? காளி வெங்கட்டின் ஹவுஸ்மேட்ஸ் எக்ஸ் விமர்சனம்…

Housemates Review: தர்ஷன், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் திரைப்படத்தின் பாசிட்டிவ், மைனஸ் பேசும் திரைவிமர்சனம் இங்கே.

இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் காளிவெங்கட், தர்ஷன், ஆஷா, வினோதினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஹவுஸ்மேட்ஸ். ஆகஸ்ட் 1ந் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பிரஸ் ஷோ தற்போது முடிந்து பலரின் விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

மெட்ராஸ் மேட்னி படத்தின் கதையின் நாயகனாக நடித்து வரவேற்பை பெற்ற காளி வெங்கட் இயக்கத்தில் அடுத்த படமாக ஹவுஸ்மேட்ஸ் உருவாகி இருக்கிறது. இப்படம் கதை வித்தியாசமான வகையில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஜானர் மாறிக்கொண்டே இருக்கிறதாம்.

முதலில் ரொமான்ஸில் ஆரம்பித்து சயின்ஸ் பிக்‌ஷன் அடுத்து ஹாரர் என தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இப்படத்தின் கிளைமேக்ஸ் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளதால் படம் ஃபீல் குட்டாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனில் வரும் ஆகஸ்ட் 1ந் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் கதை கூட பெரிய அளவில் முக்கியமானதாக இருப்பதாகவும் பலரும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். படம் மிகப்பெரிய அளவில் நல்ல விமர்சனங்களை பெறும் நிலையில் ரிலீஸுக்கு பின்னர் தான் மொத்த விவரமும் தெரியலாம்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top