Connect with us

latest news

Jinn the pet: நீங்க பாடவே போய்டுங்க முகின்… குழந்தைகளையே சோதித்த ஜின் தி பெட்… திரை விமர்சனம்!

Jinn the pet: ஆல்பம் பாடகரான முகின் பிக்பாஸ் தமிழின் மூன்றாவது சீசனில் டைட்டிலை தட்டி சென்றார். தற்போது திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வரும் முகின் நடிப்பில் ஜின் தி பெட் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பிளஸ் மற்றும் மைனஸ் பேசும் திரை விமர்சனம் இங்கே!

படம் கிட்டத்தட்ட ஒரு திரில்லர் ஜானர் என்றாலும் குழந்தைகளை கவர எடுக்கப்பட்டதாக சொல்லி இருக்கின்றனர். படத்தின் துவக்கத்தில் ஜின்னை பெண்ணின் உடலில் இருந்து பிரித்து ஒரு பெட்டியில் போட்டு விடுகின்றனர். சில ஆண்டுகள் கழித்து முகின் மலேசியாவில் இசைப்பள்ளி நடத்தி வருகிறார்.

அங்கு அவருக்கு காதல் தோல்வி ஏற்பட தமிழகம் திரும்ப முடிவெடுக்கிறார். அப்போ அவருக்கு எதேர்ச்சையாக இந்த ஜின் கிடைக்க அதை தொடும் போது ஐந்து லட்சம் பரிசாக கிடைக்கிறது. இது ராசி என நினைத்து அதை தூக்கி வந்து விடுகிறார்.

இவருக்கு மட்டும் நன்மை செய்தாலும் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் இந்த ஜின்னை தூக்கி வீசுகிறார் முகின். அப்போது அது முழு உருவம் எடுக்க என்ன நடந்தது என்பது தான் கதை.

படத்தில் முகின் நடிப்பே ஆவரேஜ் ரகம் தான். பாட்டு பாடுவதில் கில்லாடியாக இருந்தாலும் பல இடங்களில் என்ன ரியாக்‌ஷன் கொடுப்பது என யோசனை செய்வதே அப்பட்டமாக காட்டி விடுகிறார். படத்தில் நடிப்பில் ஒரே ஆறுதல் பாலசரவணன் தான்.

படத்தின் மிகப்பெரிய பிளஸே அவர்தான். ஜின் கான்செப்ட் குழந்தைகளுக்கு எனச் சொல்லப்பட்டாலும் இரண்டாம் பாதியில் முழு உருவம் எடுக்கும் ஜின்னை பார்த்தால் நமக்கே பயம் ஏற்படும் வகையில் கிராபிக்ஸ் கொடுத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

பல இடங்களில் லாஜிக் மீறல்கள். திரைக்கதை படு சொதப்பலாக அமைந்து படத்தின் மீதான ஆர்வத்தையே பல இடங்களில் நழுவ விடுகிறது. இந்த கதையை டைரக்டர் செய்யாமலே இருந்து இருக்கலாம் என தோன்றும் அளவுக்கு படம் படு மொக்கை. உஷாரைய்யா!

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top