Connect with us

latest news

Jurassic World: Rebirth: டைனோசர்களின் ராஜ்யம்… மனிதர்களின் தவறு… வொர்த்தா? வெத்தா?

Jurassic World Rebirth: ஹாலிவுட்டின் பிரமாண்ட டைனோஸர் பட சீரிஸான “ஜுராசிக் வேர்ல்ட்” படத்தின் அடுத்த படமாக ரீபெர்த் வெளியாகி இருக்கிறது. இப்படம் எப்படி இருக்கிறது என்ற முழுநீள திரைவிமர்சனம் இங்கே.

ஒரு லாபத்தில் மட்டுமே லட்சியம் கொண்ட மருந்து நிறுவனம் முன்னாள் ஆபிரேட்டரான ஸ்கார்லெட் ஜொஹான்சன் மற்றும் டாக்டர் ஹென்றி லூமிஸ் உள்பட படத்தின் முக்கிய கேரக்டர்களை ஒரு அதிரடியான பயணத்திற்கு அனுப்புகிறது.

பண்டைய டைனோசர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் எடுக்க அவர்கள் பயணமாகின்றனர். இந்த மிஷன் ஒரு சாதாரண வேலையாகத் தொடங்கினாலும், அவர்கள் பயணிக்கும் தடைசெய்யப்பட்ட தீவு மனிதனால் உருவாக்கப்பட்ட பிராணிகளால் நிரம்பியிருப்பது மூலமாக பயங்கரமாய் மாறுகிறது.

சில உயிர்கள் நிலத்தில் ஓட, சில நீரில் மிதக்க, சில பறக்க, சில களத்திலே வர என ஆரம்பத்தில் இருந்தே படம் அதிரடியை ஏற்படுத்துகிறது. பழைய ஜூராசிக் படங்களின் பயத்தை மீட்டெடுக்கிறது. இயக்குனர் கரீத் எட்வர்ட்ஸ் பரபரப்பான சண்டைக் காட்சிகளை பக்காவாக இயக்கி இருக்கிறார்.

Mosasaurus, Titanosaurus, Distortus Rex உள்ளிட்ட ஒவ்வொரு ஜூராசிக் ஹைப்ரிட் குட்டிகளும் அதிரடியான முறையில் உருவாக்கப்பட்டு ஆச்சரியப்படுத்தும். John Mathieson எடுத்த ஒவ்வொரு ஷாட்‌லும் தீவின் அழகும் அச்சரியமும் இணைந்து கலக்குகிறது.

ஜூராசிக்கை பார்த்து ஆச்சரியப்பட்டாலும் மனிதர்களின் நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை. சிறுவர்களைக் காப்பாற்றும் இடங்கள் கட்டாயமாக இருப்பது போல காட்டப்படுகிறது. Mahershala Ali மற்றும் Jonathan Bailey போன்று திறமையானவர்கள் கூட சரியாக பயன்படவில்லை.

ஆனால் படம் நிறைய எதிர்பாராத ட்விஸ்ட், சண்டைகள் கொண்டு வந்திருப்பதால் செம டைம்பாஸாக அமையும். CG சில இடங்களில் சரியாக பொருந்தவில்லை. சவுண்ட் எடிடிங் இன்னொரு சர்ப்ரைஸ் அனுபவமாக அமைந்துள்ளது.

முடிவில், Jurassic World: Rebirth பெரிய சூப்பர் திரைக்கதை இல்லை என்றாலும் தங்களுடைய முந்தைய சீரிஸ் படங்களின் தனித்துவத்தை கெடுக்கவில்லை. ஆனால் அதிரடியான ஹைப்ரிட் டைனோசர்களை கொண்டு தூள் கிளப்பி உள்ளனர். குழந்தை உள்ளத்தோடு படம் பார்க்கச்செல்வோர் ஏமாறமாட்டார்கள்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top