Connect with us

latest news

பிரபாஸ் முதல் மோகன்லால் வரை… கண்ணப்பா திரைப்படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனம்

Kannappa Review: பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருக்கும் கண்ணப்பா படத்தின் எக்ஸ் விமர்சனம் குறித்த சுவாரஸ்ய அப்டேட்.

விஷ்ணு மஞ்சு நடிப்பில் பேன் இந்தியா திரைப்படமாக் உருவாகி இருக்கும் திரைப்படம் கண்ணப்பா. முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அக்‌ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கும் திரைப்படம்.

வரலாற்றுபடமாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்து இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் ஷூட்டிங் சமயத்திலேயே முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டு பிரச்னையை சந்தித்தது. இதை தொடர்ந்து படம் இன்று வெளியாகி ஆச்சரியம் கொடுத்து இருக்கிறது.

படத்தினை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில், கண்ணப்பா படம் சூப்பராகவும் இருக்கிறது. விஷ்ணு மஞ்சு நடிப்பு அட்டகாசமாக இருப்பதாகவும் ருத்ராவாக வரும் பிரபாஸ் நடிப்பில் அசத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

முதல் பாகம் மெதுவாகவும், இரண்டாம் பாகம் மொத்தமான பக்தியை காட்டும் படமாக அமைக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் மற்றும் விஷ்ணு மஞ்சு நடிப்பில் அசத்தி இருக்கின்றனர். கடைசி 25 நிமிடம் சிலிர்த்து போகும்படியாக இருக்கிறது. இந்த வார இறுதிக்கு சரியான சாய்ஸாக அமைந்துள்ளது.

பிரபாஸ் இடம் பெறும் சிவராத்திரி எபிசோட் படத்திற்கு பக்காவாக உள்ளது. விஷ்ணுவின் கடைசி 20 நிமிடம் சரியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆதி படத்திற்கு பிளஸ் பாயிண்ட். படத்தின் எல்லா பாடல்களுமே சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு மஞ்சு நடிப்பில் கண்ணப்பா தொடர்ந்து பாசிட்டிவ் ரிவியூக்களால் குவிக்கப்பட்டு வருகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top