Connect with us

latest news

கிங்டம் படம் விஜய தேவரகொண்டாவுக்கு வெற்றியா? தோல்வியா?.. டிவிட்டர் விமர்சனம்..

Kingdom Review: அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் விஜய தேவரகொண்டா. அதன்பின் இவர் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. ராஷ்மிகா மந்தனாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படமும் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது. துவக்கத்தில் வித்தியாசமான காதல் கதைகளில் நடித்து வந்த விஜய தேவரகொண்டா ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறினார்.

அப்படி அவர் நடித்த லிகர் ஹிட் படமாக அமையவில்லை. எனவே மீண்டும் குஷி போன்ற காதல் கதைகளில் நடிக்க துவங்கினார். அந்த படங்களும் ஓடவில்லை. இப்போது இவரின் நடிப்பில் உருவான கிங்டம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை கெளதம் தின்னனூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். படத்தின் முதல் பாதி சிறப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் போரடிக்கவில்லை. எமோஷனல் காட்சிகள் நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. முதல் பாதியில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் இடைவேளை காட்சி நன்றாக இருக்கிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

விஜய தேவரகொண்டாவின் நடிப்பும் கெளதமின் இயக்கமும், அனிருத் பின்னனி இசையும் படத்திற்கு பெரிய பலம் என ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னொருவரோ ‘வாழ்த்துகள் விஜய தேவரகொண்டா!.. பல தோல்விகளுக்கு பின் உங்களுக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top