Connect with us

latest news

குபேரா எப்படி இருக்கு? தனுஷ், பாக்கியராஜ் பற்றி யாருக்கும் தெரியாத தகவலைச் சொன்ன பயில்வான்…!

தனுஷ் நடித்த குபேரா படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாமா…

குபேரா படத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, பாக்கியராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சேகர் கம்முலா கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். தனுஷ் நடித்த முதல் தெலுங்கு படம் இதுதான். தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ளது.

தனுஷூக்குத் தாய்மொழி தெலுங்கு. அவர் அழகா தெலுங்கு பேசுவார். தனுஷ் முதல் முறையாக இந்தப் படத்தில் பிச்சைக்காரனாகவே வாழ்ந்து இருக்கிறார். பிச்சைக்காரனாவே வாழணும். அந்த டிரஸ்தான். குளிக்க முடியாது. சாப்பிட முடியாது. நாத்தம் புடிச்ச அந்த டிரஸ்சைப் போட்டுத்தான் நடிக்கணும்.

அவ்ளோ பெரிய நடிகர். அப்படியே வாழ்ந்து இருக்கிறார். அதனால பிச்சைக்காரனா நடிக்கிறது பெரிய விஷயம். தனுஷ் பிச்சைக்காரனாவே வாழ்ந்து இருக்கிறார். வழக்கமா குத்து, வெட்டுன்னு பார்த்தவங்களுக்கு இது புதுசா இருக்கும். ஆனா படம் ஸ்லோவாகத் தான் போகுது. முதல்ல இந்தப் படம் மூன்றரை மணி நேரம் ஓடுச்சு. அப்போ எழுந்த நெகடிவ் விமர்சனத்தால் 3 மணி நேரமாக இயக்குனர் குறைத்து விட்டார்.

இந்தப் படத்தின் முக்கியமான திருப்புமுனை ராஷ்மிகா மந்தனா கேரக்டர்தான். நாகர்ஜூனா இந்தப் படத்தில் தனுஷ் எங்கெங்கே மாட்டிக்கிடுவாரோ அங்கெல்லாம் வந்து நிற்கிறது அவர்தான். அவர் வில்லனா, நல்லவனான்னு தெரியாது. சேகர் கம்முலாக்குத் தான் தெரியும். நாகர்ஜூனா தனுஷை இசை விழாவில் பாராட்டியுள்ளார்.

படத்தில் வில்லன் வெப்சீரிஸில் நடித்துள்ளார். ஹீரோ மாதிரியாகவே இருக்கிறார். ஒரு பிச்சைக்காரனுக்கு என்னடா வில்லன்னு கேட்கலாம். இருக்கு. அதுலதான் மேட்டர் இருக்கு. பாக்கியராஜ் இப்போது படங்கள் இல்லை. ஆனாலும் இதுல ஒரு சின்ன கேரக்டர்ல பேசக்கூடிய அளவில் நடித்துள்ளார்.

இவரும் ஒரு தெலுங்கர் தான். இந்தி வில்லன்கூட போட்டுருக்காங்க. இந்தப் படத்தில் ஆன்மிகத்தைப் புகுத்தி இருக்காங்க. ஆன்மிகத்தினால் வெற்றி உண்டுன்னும் சொல்லிருக்காங்க. தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். அவரது வழக்கமான சேட்டைகள், குறும்புகள் இந்தப் படத்தில் இல்லை. பாடல்கள் சுமார்தான்.

பின்னணி இசை சூப்பர். பட்ஜெட் 120 கோடி. 200 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிவிட்டது. தனுஷ் ஈசியா தெலுங்கு மார்க்கெட் போவார். அதற்கான வாய்ப்புகள் அதிகம். பணம் மனிதரால் படைக்கப்பட்டது. சரியான நேரத்தில் பணம் நண்பனாகும். எதிர்பாராத நேரத்தில் எதிரியாகும். பணத்தால் உயிர் வாழ வைக்க முடியாது.

பணத்தால் நிர்கதியாகும் சூழலும் உருவாகும். குபேரனா இருப்பவன்கூட சில நேரத்துல பிச்சைக்காரனாகத்தான் வாழ்வான். மதிப்பு இருக்கும்போது அது ரூபாய். இல்லன்னா வெற்றுக்காகிதம் என்ற மிகப்பெரிய தத்துவத்தைப் படத்தில் சொல்லி இருக்காங்க. யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படம்.

அரசியல்வாதிகள் இப்போ எப்படி நடந்துக்கிட்டு இருக்காங்களோ அதை திரையில் பார்க்கலாம். விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரனும், குபேராவில் வரும் பிச்சைக்காரனும் வேற வேற. இப்ப நாட்டுல நடக்குற அரசியல எடுத்துருக்காங்க. மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top