Connect with us

latest news

கொஞ்சம் மாவீரன்… கொஞ்சம் குடும்பஸ்தன் கலந்த ஒரு கேசரி… மெட்ராஸ் மேட்னி படம் எப்படி இருக்கு?

Madras Matnee: ஒரு எழுத்தாளர் சொல்லு கதையாக குடும்பத்தின் பிரச்னையை பேசும் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் அதன் பாசிட்டிவ், மைனஸ் பேசும் திரை விமர்சனம் இங்கே.

சயின்ஸ் பிக்‌ஷன், துப்பறியும் கதை எழுதும் நாவலாசிரியர் சத்யராஜ். இவருக்கு ஒரு சுவாரஸ்யமான கதை எழுத சவால் வருகிறது. அதை ஏற்று சாமானியர் ஒருவரின் வாழ்க்கையின் பிரச்னைகளை சொல்வதாக அந்த கதை விரிய என்ன நடக்க போகிறது என்பதுதான் மொத்த கதை.

ஓட்டோ டிரைவர் கண்ணன் வேடத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நிற்கிறார். அவருக்கு மனைவியாக ஷெல்லி, மகளாக ரோஷினி வெங்கட், மகன் விஷ்வா நடித்திருக்கின்றனர். சாதாரண கதையாக தொடங்கும் இந்த குடும்பத்தின் சந்தோஷத்துடன் தொடங்குகிறது.

பின்னர் பிரச்னை உருவெடுக்க குடும்பத்தின் கடன் நெருக்கடி, அப்பா மகள் சண்டை, மன கசப்புகள், உறவுகளின் ஈகோ என ஒரு அடிப்படை குடும்பத்தினை அக்குவேராக சொல்ல முடிவு எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன் மணி.

ஆனால் கிட்டத்தட்ட இதே போன்ற குடும்ப கதை தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே பழசு. பிரச்னைக்கு பஞ்சமில்லாமல் படம் பார்க்க போனால் இங்கையுமா என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. திரைக்கதை புதிதாக டிரை செய்ய நினைத்தால் கடுப்படிக்கும் வகையிலும் உள்ளது.

மாவீரன் ஸ்டைலில் சத்யராஜின் வாய்ஸ் படத்துடனே வருகிறது. அது சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. கிட்டத்தட்ட எஃப்.எம் பார்க்கும் வகையில் மழை பெய்ய போகும் காட்சிக்கு கூட மழை வருது என்ற ரீதியில் பேசி நம்மை கடுப்பேத்துகிறார்.

படத்தின் மேக்கிங்கில் செம சொதப்பல். ஆனால் காப்பாற்றி இருப்பது கதாபாத்திரங்களின் தேர்வால் தான். அதிலும் மிடில் கிளாஸ் அப்பாவாக காளி வெங்கட்டை பார்க்கும் போது நம்மை உலுக்காமல் இல்லை. நடிப்பில் ஏ கிளாஸில் பாஸ் பண்ணிவிட்டார்.

சத்யராஜுக்கு சின்ன வேடம் என்றாலும் அவர் தனக்கு ஸ்கோர் செய்து கொள்ள தயங்கவே இல்லை. சின்னத்திரை நடிகை ரோஷினி இப்போ தேறிவிட்டார். இனி கோலிவுட்டில் சீட் கன்பார்ம் போல. அப்படி நடிப்பில் மிரட்டி விட்டு இருக்கிறார்.

மகனாக வரும் செல்வா நடிப்பும் அக்மார்க் அந்த வயது இளைஞனை கண்ணுக்கு கொண்டு வருகிறார். குடும்ப தலைவியாக வரும் ஷெல்லி குறைவான வசனங்களை பேசினாலும் மனதில் ஒட்டிக்கொள்கிறார். இப்படத்தின் இன்னொரு பலம் எடிட்டிங் தான். அழகாக காட்சிகளை தொகுத்து இருக்கின்றனர்.

சினேகன் வரிகளில், வடிவேலு பாடிய ‘என்னடா பொழப்பு இது’, விஜய் யேசுதாஸ் பாடிய ‘உசுரே உன்னைத் தானே’ பாடல்கள் நன்றாக இசையமைத்து இருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன்.

வித்தியாசமான கதையாக கொண்டு செல்ல நினைத்த இயக்குனருக்கு பல இடங்களில் கைக்கொடுக்கவில்லை. சத்யராஜின் ஆடியோ வாய்ஸ் சில இடங்களை தவிர மற்ற இடங்களில் படத்துடன் ஒன்ற செய்யாமல் இருக்கிறது. ஒரு ஃபீல் குட் படமாக ஒருமுறை பார்க்கவே கொஞ்சம் மன தைரியம் வேண்டும்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top