Connect with us

latest news

சூரியை வெளுத்து வாங்கும் நிவின்பாலி.. ஏழு கடல் ஏழு மலை படம் டிரெய்லர் எப்படி இருக்கு?..

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கின்றது. இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எப்போதும் தனித்துவமாக இருக்கும். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என தொடர்ந்து பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

தற்போது மலையாள நடிகரான நிவின்பாலியை வைத்து ஏழு கடல் ஏழுமலை என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கின்றார். வி ஹவுஸ் ப்ரோடக்‌ஷன் சார்பாக சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து இருக்கின்றார்.

கடந்த ஒரு வருடமாக இப்படம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

இந்த திரைப்படத்தின் க்ளிப்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கின்றது. ஒரு வித்தியாசமான கதையை நிவின் பாலி மற்றும் சூரியை வைத்து இயக்கி இருக்கின்றார் இயக்குனர் ராம்.

தற்போது வெளியான ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போது ரயிலில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. ஒரு இரவில் இரண்டு நபர்கள் சந்திக்கிறார்கள். அதில் ஒருவர் மரணமற்ற நபராக இருக்கின்றார். அவர் தான் நிவின் பாலி. ரயில் பயணத்தின் நடுவே இரண்டு நபர்கள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. மேலும் நிவின்பாலி நடிகர் சூரியை அடித்து பொளந்து கட்டுகின்றார். இந்த ட்ரெய்லரில் நடிகை அஞ்சலி மாய பெண்ணாக காட்டுப்பட்டிருக்கின்றார். மேலும் நிவின்பாலி ஒரு எலியை பத்திரமாக பார்த்துக் வருகின்றார்.

பார்ப்பதற்கு ஹாரர் திரைப்படம் போல உணர்வை கொடுத்திருக்கின்றது. இந்த திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

author avatar
ramya suresh
Continue Reading

More in latest news

To Top