Connect with us

latest news

OTT Watch: ஏஐ கொலை செய்யுமா? நெட்பிளிக்ஸில் மிஸ் பண்ணக்கூடாத CTRL… வொர்த்தா? வெத்தா?

OTT Watch: ஆடம்பரமான செட்டுகளும் நிறைய நடிகர்களும் இல்லாமல் ரொம்ப கம்மியான நடிகர்களை வைத்து படத்தினை எடுத்தாலும் திரில்லிங் குறையாமல் வந்து இருக்கிறது ctrl திரைப்படம். இதன் பாசிட்டிவ், மைனஸ் பேசும் விமர்சனம் இங்கே.

நெல்லா அஸ்வதி மற்றும் ஜோ இருவரும் கல்லூரியில் இருந்து காதலிக்க தொடங்குகின்றனர். இருவரும் தங்கள் காதல் நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட ஒரு சேனலை உருவாக்கி அதில் அவர்கள் வீடியோக்களை பதிவிட தொடங்குகின்றனர்.

என் ஜாய் என தொடங்கப்பட்ட அந்த சேனல் மிகப்பெரிய அளவில் புகழை குவிக்கிறது. இருவரும் டாப்ஹிட் ஜோடியாக மாறுகின்றனர். அப்படி ஐந்து வருடம் செல்கின்றனர். ஒருகட்டத்தில் லைவ்வில் தன் காதலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நெல்லா செல்கிறார்.

அங்கு ஜோ இன்னொரு பெண்ணை கிஸ் பண்ண செல்ல இதை லைவில் அவர் ரசிகர்களும் பார்த்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் நெல்லா அந்த பெண்ணையும் ஜோவையும் அடித்து உதைத்துவிட்டு வருகின்றனர். டிரெண்டிங்கில் நெல்லாவையும் விமர்சிக்கின்றனர்.

காதலரை பிரிந்தவர் மன அழுத்தத்தில் இருக்க அப்போது CTRL என்ற ஆப்பை டவுன்லோட் செய்கிறார். அது ஒரு ஏஐ மனிதன். அவனுடன் பேசிக்கொண்டே தன்னுடைய காதலனின் புகைப்படங்களை அழிக்க தொடங்குகிறார். 90நாட்கள் எடுக்கும் என கூறப்பட அந்த ஏஐ தன் தோழினாக்கி கொள்கிறார்.

அதன் வழிநடத்தலில் இவர் தனியாக சேனலை நடத்தி டாப் லெவலுக்கு வருகிறார். ஒருகட்டத்தில் புகைப்படங்களை அழிக்க தான் இல்லாமல் அனுமதி கொடுக்க தன் லேப்பின் மொத்த பெர்மிஷனை கொடுத்து விடுகிறார். அதனை பயன்படுத்தி இந்த ஆப்பின் டெலவப்பர் டீம் நெல்லாவை தங்கள் வசமாக்குகின்றனர்.

ஒரு கட்டத்தில் மீண்டும் ஜோ இவரை சந்திக்க வர அவரை நெல்லா தவிர்த்து விடுகிறார். மெசேஜ் மூலம் சில விஷயங்கள் பேசணும் வர வேண்டும் எனக் கேட்க ஏஐ வந்துவிடுவதாக சொல்கிறது. ஆனால் சில நாட்கள் ஜோ செத்த விஷயம் தான் உடைகிறது.

யார் அவரை கொலை செய்தார். இந்த ஏஐயால் என்ன நடந்தது. இதில் நெல்லா எப்படி தப்பித்தார் என்பதை பரபரப்பாக சொல்லி இருக்கிறது. அனன்யா பாண்டேயின் நடிப்பு ஏ ரகம். கண்டிப்பாக நெட்பிளிக்ஸில் இருக்கும் இந்த படத்தினை மிஸ் பண்ணாதீங்க.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top